24 special

இந்திய கப்பற்படை பிரதமர் மோடிக்கு அவசர அழைப்பு..?

Indian naby
Indian naby

புதுதில்லி : சுதேசி விமானம் தாக்கி போர்க்கப்பல் என வர்ணிக்கப்படும் IAC 1 மற்றும் உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட INS விக்ராந்த் போர்க்கப்பலை வருகிற சுதந்திரதினத்தன்று தன்னம்பிக்கையின் சின்னம் என அழைக்க பிரதமர் மோடிக்கு கப்பற்படை அழைப்பு விடுத்துள்ளது.


கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கடந்த பத்துவருடங்களாக கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்த 45000 டன் எடைகொண்ட இந்த INS விக்ராந்த் இறுதிநிலையில் உள்ளது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாகி கப்பல் என்பது இந்தியர்கள் அனைவரயும் பெருமைகொள்ள செய்யும் ஒன்றாகும். மேலும் இது இந்திய கப்பல்கட்டும் தொழிலின் மாபெரும் சாதனை என்றால் அது மிகையாகாது.

இதற்க்கான அழைப்பிதழ் பாதுகாப்பு அமைச்சகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் பயணத்தேதிகள் மற்றும் வருகைக்கான தேதிகள் ஆராயப்பட்டு வருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல INS விக்ராந்த்தின் முதல் பயணத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. இந்த கப்பலுக்கு INS விக்ராந்த்என பெயரிட்டதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

1971களில் நடந்த பாகிஸ்தானுடனான யுத்தம் தொடங்கி பல ஆண்டுகளாக கடற்படையில் சேவை செய்த முந்தைய INS விக்ராந்த்தின் நினைவாகவே இந்த கப்பலுக்கும் INS விக்ராந்த்என பெயர்சூட்டப்பட்டுள்ளது. முந்தைய INS விக்ராந்த் ராயல் கடற்படையிலிருந்து வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிடம் ஏற்கனவே INS விக்ரமாதித்யா உள்ளது.

ஆனால் இந்த விக்ரமாதித்யா  ரஷ்யாவால் நீண்ட வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட அட்மிரல் கோர்ஷ்கோவ் என்பது யாரும் அறிந்திராத ஒன்று. இந்த INS விக்ராந்த்தில் என்னமாதிரியான போர்விமானங்கள் இருக்கும் என உறுதியானதகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் ரஷ்யாவின் மிக் 29கே அல்லது அமெரிக்கன் எப்-18 அல்லது பிரெஞ்சு ரபேல் போர்விமானங்கள் பரிசீலனையில் உள்ளன. 

அதேபோல மலபாரில் நமது கடற்படை பயிற்சிகளில் அமெரிக்காவின் எப்-18 பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த INS விக்ராந்த்தில் 30 போர்விமானங்கள் வரை நிறுத்தமுடியும் என கூறப்படுகிறது. இதுபற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.