24 special

பிஜேபியில் அதிரடி மாற்றம்..! செய்தி தொடர்பாளர்களுக்கு எச்சரிக்கை..!

Bjp
Bjp

புதுதில்லி : உத்திரபிரதேச பிஜேபி தலைவர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடுத்து இஸ்லாமிய நாடுகள் தங்கள் கடும் கண்டனத்தை பதிவுசெய்திருந்தன. மேலும் கத்தார் இந்தியாவை பொதுமன்னிப்பு கேட்க கோரியது. அடுத்தடுத்த சர்வதேச நெருக்கடிகளால் பிஜேபி நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து நீக்கியது.


இந்நிலையில் பிஜேபி அதன் செய்திதொடர்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதன்படி பிஜேபி தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட செய்திதொடர்பாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட குழு மட்டுமே இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுவார்கள். விவாதத்துக்கு செல்வோர் மீடியா செல் மூலமே நியமிக்கப்படுவார்கள்.

மேலும் எந்த ஒரு மதத்தையும் அதன் சின்னங்களையும் அல்லது மத பிரச்சாரகர்களையோ மத பிரமுகர்களையோ விமர்சிக்க கூடாது என பிஜேபி தனது செய்தி தொடர்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காரசாரமான விவாதங்கள் நடக்கையில் குழு உறுப்பினர்கள் எல்லையை கடக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவாதங்களில் பங்கேற்போர் தங்களது வார்த்தையை கவனமாக கையாளவேண்டுமென்றும் கேள்விகளால் கிளர்ந்தெளவோ மிகுந்த உற்சாகமடையவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆத்திரமூட்டும் கேள்விகளால் கட்சியின் சித்தாந்தத்தையோ அதன் லட்சியத்தையோ புறக்கணிக்க கூடாது.  தொலைக்காட்சி விவாதத்திற்கு செல்லும் முன் அதன் தலைப்புகளை சரிபார்க்க வேண்டும்.

எந்த ஒரு ஊடகத்திலும் தோன்றுமுன்னர் தலைப்புகள் குறித்து முன்னரே ஆயத்தமாகவேண்டும். கட்சியின் மாண்பை குறைக்கும் வகையிலான பேச்சுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என கட்சி தலைமை தனத்துச்செய்தி தொடர்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.