24 special

கூட்டுப்பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்..! சிக்கிய பிரபலத்தின் வாரிசு..!


ஹைதராபாத் : கடந்த மே 28 அன்று சிறுமி ஒருவர் ஆறுபேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்ற செயலில் ஈடுபட்டவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள் என்பது அனைவரையும் அதிர்ச்சியூட்டியது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஆளும் கட்சி மற்றும் AIMIM கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் என செய்திகள் அடிபட்ட நிலையில் காவல்துறை முதலில் திட்டவட்டமாக மறுத்து வந்தது.


தேசமெங்கும் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்க தெலுங்கானா பிஜேபி எம்.எல்.ஏ ரகுநந்தன் ராவ் ஒரு வீடியோ மற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் TRS பிரமுகர்களின் வாரிசுகள் என கூறியிருந்தார். 



அவர்மீது பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதாக கூறி நேற்று காவல்துறை வழக்கு பதிந்தது. இந்நிலையில் முதலில் சட்டமன்ற உறுப்பினரின் மகன் உள்ளூர் பேஸ்ட்ரி கடையில் அந்த குழுவை விட்டு சென்றுவிட்டார். அதனால் அவர் அந்த குற்றத்தில் ஈடுபடவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர். போலூஸாரின் அறிக்கையில்,

அவர் இன்னோவா காரில் சிறிது தூரம் மட்டுமே பயணித்தார். அந்த நேரத்தில் அவருக்கு அலைபேசி அழைப்பு வந்ததால் சென்றுவிட்டார். மற்ற ஐவரும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டனர்" என கூறியிருந்தது. இதை போலீஸ் கமிஷனருக்கு உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் கமிஷனர் ஆனந்த் கூறுகையில் அந்த வாலிபர் சம்பவத்தன்று மதியம் ஒரு,மணியளவில் கிளப்புக்கு வந்துள்ளார்.

சுமார் 100 மாணவர்கள் பெயரில் 1300 ரூபாய் கொடுத்து விடுதியை முன்பதிவு செய்துள்ளார் ஒஸ்மான் அலிகான் பெயரில் 900 ரூபாய் கொடுத்து சிறுவர்களால் பப் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 28 மதியம் 3 மணிக்கே சிறுமிக்கு பாலியல் தொல்லைகள் ஆரம்பித்துள்ளது. சிறுமியின் நண்பர் வெளியே சென்றதும் பப்பிற்கு வெளியே சிறுமி மாட்டிக்கொண்டார்.

நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்துள்ளோம். அவர்களுக்கு மரணதண்டனை அல்லது இருபதாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்" என கமிஷனர் விளக்கமளித்துள்ளார். மேலும் சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு ஆறாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் சங்காரெட்டியை சேர்ந்த TRS கட்சி பிரமுகரின் வாரிசு மற்றும் ஹைதராபாத் TRS கட்சி பிரமுகரின் வாரிசு மற்றும் AIMIM சட்டமன்ற உறுப்பினரின் வாரிசு ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் காவல்துறை வழக்கை திசைமாற்ற முயற்சிப்பதாக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல்கொடுத்ததையடுத்து AIMIM பிரமுகர் மற்றும் TRS பிரமுகரின் வாரிசுகள் மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.