இராஜபாளையம் வாட்ஸாப் குழுக்களில் கடந்த சில நாட்களாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஒரு தகவல் ஒன்று பரவியது அதில் கொரோனா நேரத்தில் அமைச்சர் எதுவும் செய்யவில்லை எனவும், இப்போது வந்து அனைத்து சமுதாய மக்களின் அன்பை பெறுவதா எனவும் என்ன இராஜபாளையத்திற்கு செய்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பி ஒருவர் பெயரில் அமைச்சருக்கு மடல் எழுதப்பட்டது.
அந்த மடல் எழுதிய நபருக்கு அதே ஊர் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர், இராஜபாளையம் என்ற ஊர் பெயரை கூட சரியாக எழுத தெரியாமல் இராச பாளையம் என எழுதி இருக்கும் அந்த நபர்கள் கொரோனா காலத்தில் எங்கு இருந்தார்கள் என தெரியவில்லை ஒரு வேலை தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன செய்தார் என்பதை தெரிந்து கொண்டிருக்கலாம்.
ஏழை எளிய ஆதரவற்ற மக்களின் உணவு தேவையை கருத்தில் கொண்டு உலகை ஆட்டி படைத்த கொரோனா நேரத்திலும் களத்தில் இறங்கி அனைத்து அம்மா உணவகங்களிமும் மூன்று வேலையும் இலவச உணவு வழங்கியவர் அமைச்சர், எங்கோ ஒருவரிடம் காசு வாங்கி கொண்டு அமைச்சருக்கு எதிராக எழுதும் நபர்களுக்கு ஒரு வேலை உணவிற்கு பசி தேடி அலையும் ஏழைகளின் வலி தெரியுமா?
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன செய்தார் என கேட்கும் நீங்கள் இராஜபாளையத்தில் இருந்தால் ரயில்வே மேம்பலாம் பணிகளை பாருங்கள், பாதாள சாக்கடை திட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் ஏன் இவை அனைத்தையும் தாண்டி ஒவ்வொரு சமுதாய தலைவர்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் அமைச்சர் என்ன செய்தார் என..
குடும்பமே கட்சி என ஒரு மாபியா கூட்டம் தமிழக மக்களை மீண்டும் கொள்ளை அடிக்க பணத்தை வாரி இறைக்கும் சூழலில் இராஜபாளையம் மக்களே தனது குடும்பம் என தேடி வந்திருப்பவர் அமைச்சர், அவருக்கு வாரிசுகள் எல்லாமே இந்த தமிழ் மக்கள் தான், அவரால் பயன்பெற்றவர்கள் இன்று அவருக்காக வீதியில் இறங்கி நேரடியாக வாக்கு கேட்டு செல்கிறார்கள் செல்கிறோம்.
ஏன் என்றால் மீண்டும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் இராஜபாளையத்தில் தொழில் செய்யும் சிறு முதலாளிகள் அனைவரின் நிலை என்ன ஆகும் என அனைவரும் அறிவர், மின்சாரம் தடை பட்டு இராஜபாளையத்தின் வாழ்வதாரத்தையே முடக்கிய திமுகவின் ஆட்சியின் லட்சணத்தை நாங்கள் மறக்கவில்லை, இரவு முழுவதும் தூங்காமல் எங்கள் பிள்ளைகள் வியர்த்து அழுத அழுகையும் எங்கள் மனதில் இருந்து நீங்கவில்லை...
பெண்கள் குழந்தைகள் என திமுகவினர் நடத்திய அராஜகங்கள் குறிப்பாக இராஜபாளையதிற்கு வருகை தந்த உதயநிதியை மகிழ்விக்க ஆற்று மணல் அனைத்தையும், நீங்கள் நடத்திய கட்சி கூட்டத்திற்கு கொண்டு நிரப்பியதும் கேட்க சென்ற எங்கள் இராஜபாளையம் மக்களை அடுத்து எங்கள் ஆட்சிதான் என மிரட்டியதை இராஜாபாளையம் மக்கள் மறப்போமா?
ஏப்ரல் 6 அன்று இராஜபாளையம் மக்களாகிய நாங்கள் குடும்ப ஆட்சியை எதிர்த்தும், மணல் கொள்ளையை எதிர்த்தும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 நிமிடத்தில் மணலை திருடி கொள்ளலாம் என பேசிய திமுகவிற்கு எதிராகவும், வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்து பேச கூடிய ராஜேந்திரபாலாஜி அவர்களுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்போம்.
நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக MLA நடத்திய அராஜக ஆட்டங்களுக்கு எதிராகவும் ராஜபாளையத்தின் வளர்ச்சிக்காக மட்டும்தான் இருக்கும்.
இப்படிக்கு இராஜபாளைய மக்களில் ஒருவன் என இராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் இணையதளத்தில் அவருக்கு ஆதரவாக பதிலடி கொடுக்க ராஜபாளைய அரசியல் களமே பம்பரமாக சுழன்று கொண்டு உள்ளது.