Politics

ஒருத்தரையும் விடாதீங்க.. உங்களுக்கு தான் முழு ஆதரவு! உள்ளே வந்த வல்லரசு நாடுகள்! உச்சக்கட்ட பதற்றத்தில் பாக்

pmmodi
pmmodi

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எப்போது வெண்டுமானாலும் பாகிஸ்தான் மீது நம் நாட்டு பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தக் கூடும்.அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது இந்தியா.  முப்படை அதிகாரிகளை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தியது, பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கனவிலும் நினைக்காத அளவுக்கு பதிலடி இருக்கும் என்றும் மோடி தெரிவித்து இருக்கிறார். அடுத்தடுத்து இந்தியா எடுத்து வரும் ராஜதந்திர நடவடிக்கைகள் பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் என  இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போய் உள்ளது.


பாகிஸ்தானை எடுத்து கொண்டால் தற்போது பொருளாதார நிலை என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உலக வங்கி உள்பட பிற அமைப்புகள், நாடுகளிடம் இருந்து தான் பாகிஸ்தான் கடன் வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. மேலும் அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் பெரிய அளவில் இல்லை. இது காலியாகும் பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை பாகிஸ்தானால் வாங்க முடியாது. இப்படியான சூழலில் நம் நாட்டுடன் பாகிஸ்தான் மோதுகிறது. இது அந்த நாட்டுக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். 

இதற்கிடையே போர் வெடித்தால் பாகிஸ்தானால் வெறும் 4 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகப் பீரங்கி வெடிகுண்டுகள் பாகிஸ்தானிடம் மிகக் குறைவாகவே இருக்கிறதாம். இதனால் பாகிஸ்தான் ராணுவமே பதற்றத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன்- ரஷ்யா இடையே மோதல் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அதேபோல இஸ்ரேலும் ஹமாஸ், ஹவுதியுடன் போரை நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளும் (உக்ரைன், இஸ்ரேல்) தேவையான வெடிமருந்துகளை வாங்க பாகிஸ்தானுடன் ஆயுத ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டன. இதனால் அந்த இரு நாடுகளுக்கும் பாகிஸ்தான் வெடிமருந்துகளை அதிகம் அனுப்பிவிட்டன. இதனால் பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆயுதங்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. இதனால் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை ரெடி செய்து தர முடியாமல் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலைகள் என்ற நிறுவனம் தள்ளாடி வருகிறது.

இதற்கிடையில் உலக  வல்லரசுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நிற்கிறார்கள்.  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசிய நிலையில், கொடூரமான தாக்குதல் நடத்தியவர்கள், காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு ஆதரவு அளித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மட்டுமல்லாமல்  பயங்கரவாதிகள் ஒருத்தரையும் விடாதீங்க, உங்களுக்கு தான் இந்த விவகாரத்தில் முழு ஆதரவு  வழங்குவோம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அலறிப்போயுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அலறி வரும் பாகிஸ்தான் தற்போது மிரண்டு போயுள்ளது.

ஏற்கனவே பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போராடும் போது அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும். இஸ்ரேல் இந்தியா குறித்து கூறுகையில்  உற்ற தோழனுக்கு எந்த நேரத்திலும் அனைத்து வகையான ஆயுதங்கள் வழங்க தயார் என கூறியுள்ளார்கள். . இதேபோன்று பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் இந்த நாடுகளும் இந்தியாவுக்கே ஆதரவு அளிக்கும். இதனால் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டாலும் கூட உலக நாடுகள் பல இந்தியாவுக்கு தான் ஆதரவு அளிக்கும் என்பது ஐயமில்லை.