
இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பாக் ஆதரவு பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து நெற்றி பொட்டில் துப்பாக்கி சூடு நடத்தி 26 பொதுமக்களை சுட்டுக்கொன்றார்கள். இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றது
பெஹல்காமில்நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே கர்நாடகாவின் சிவ்மொஹாவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர் . மனைவி பல்லவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத் உயிரிழந்தார்.இதுகுறித்து பல்லவி கூறுகையில், என் கண்முன்னே அவரை கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது.நான்கு பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி கூறினார்" என்றார்.பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர். 26 குடும்பத்தை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள் பாக் ஆதரவு தீவிரவாதிகள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.
பிரதமர் மோடி இரவு முழுவதும் முப்படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் முப்படை அதிகாரிகளுடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்திய பிரதமர் மோடி, நேற்று முழுவதும் பல கூட்டங்களை நடத்தினார். அதன்படி, முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் 'திலகம்' எனப் பொருள். அதாவது இந்து கலாச்சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர். இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் சமூக ஊடக பங்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த காட்சிகளில் தாக்குதலின் தாக்கம் தெளிவாக பதிவாகி உள்ளது.மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் SCALP (Storm Shadow) மிசைல், HAMMER (Highly Agile Modular Munition Extended Range) புத்திசாலி குண்டு, மற்றும் லாயிட்டரிங் மியூனிஷன்ஸ் (காமிகாஸி டிரோன்கள்) உள்ளிட்ட உயர் துல்லியமான நீண்ட தொலைவு தாக்குதல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இஸ்ரேல் வழங்கிய ரஃபேல் ஜெட் விமானங்கள், ரஷ்யாவின் சுகோய் உள்ளிட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.