ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை நீக்கிவிடுவோம் என பொய்யான வாக்குறுதி ஒன்றை கொடுத்து தேர்தலை சந்தித்த திமுக, மீண்டும் நீட் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஒரே கையெழுத்தில் முடியாமல், இப்போது ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்குவோம், மக்கள் பிரச்சனையாக எடுத்துச் செல்வோம் என உதயநிதி பேசி வருவது கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெரச்ன்டைஸ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. "ஜீரோ" மார்க் வாங்குறது தகுதியா?. இப்படிப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு தான் இருக்கும். உதயநிதி மட்டும் போராடினால் பத்தாது.அத்தனை பேரும் களத்தில் இறங்கி போராட வேண்டும். ஆர்.பி உதயக்குமார் நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேட்க சொல்கிறார்?. நான் இப்போது சொல்கிறேன், திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைக்கிறேன்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு திராணி இருந்தால் திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இட முடியுமா? என கேட்டிருந்தார்இந்த நிலையில், நீட் தேர்வில் பூஜ்யம் எடுத்தால் படிக்க இடம் கிடைக்காது என்றும் நீட் தேர்வை பற்றி தெரியாமல் அதை ஒழிப்பதாக பேசுபவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.''மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்யம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அறிந்து கொள்ளவும். '' ''நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. ''
''நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம். இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை. மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை.''''அத்தகைய இடங்கள் முழுமையாக நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் புரிதல் மிக அவசியம். ''''நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை. இதை விமர்சிப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம். இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். '' என கூறியுள்ளது பரபரப்பாக பேசப்படு வருகிறது