அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் அமைச்சராக சுற்றி வந்த பொழுது கொங்கு மண்டலம் திமுகவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது திமுகவின் கோட்டை என்றும் கொங்கு மண்டலத்தை கூறி வந்தனர். ஆனால் என்று செந்தில் பாலாஜி பத்து ரூபாய் பாலாஜி என்று அழைக்கப்பட்டாரோ அதற்கு அடுத்து இருந்தே கொங்கு மண்டலத்தில் திமுகவின் அழிவு காலம் ஆரம்பிக்கப்பட்டது என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அந்த அளவிற்கு அடியை திமுக கொங்கு மண்டலத்தில் பெற்று வருகிறது. மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகின்ற எண் மண் என் மக்கள் பாதை யாத்திரையும் கொங்கு மண்டலத்தில் மிகவும் விமர்சியாக நடைபெற்றது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் பெருவகையிலான வரவேற்பை அண்ணாமலைக்கு கொடுத்தனர் என்பதும் செய்திகளில் பரபரப்பாக வெளியானது. அதுமட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் எப்பொழுதுமே திமுகவில் உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இல்லை என்பதும் அவ்வப்போதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளராக இருந்த யுவராஜ் என்பவர் திமுக 2021 ஆம் ஆண்டு ஆட்சி பிடித்த உடன் திமுக பக்கம் தாவி விட்டார். இப்படி இவர் கட்சித்தாவிய உடனே யுவராஜை ஆனைமலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்து உத்தரவிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து திமுகவின் காலம் காலமாக தொண்டர்களாகவே இருந்து வரும் பலருக்கு கோபத்தை அளித்தது. ஏனென்றால் திமுகவின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கடுமையாக இறங்கி வேலை செய்து வரும் தொண்டர்கள் எவரும் கட்சியின் ஒரு பொறுப்பில் அமரவில்லை ஆனால் மாற்றுக் கட்சிகளிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களே தற்பொழுது அதிகமாக பொறுப்பில் அமர்த்த படுகிறார்கள் என்பதும் திமுகவினரிடையே உள்ள பெரும் குற்றச்சாட்டு. இதனை கோவையைச் சேர்ந்த திமுக தொண்டரான அதிரடி தினகரன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியை கட்சியில் சேர்த்து ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு செயலாளராக ஆக்கினால் என்ன என்று கேட்கிறேன் இல்லையென்றால் எடப்பாடியை கட்சியில் சேர்த்துக் கொண்டு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து விடலாமே!....கோவை தெற்கு மாவட்டத்தில் இந்த லட்சணத்தில் தான் கட்சி இருக்கிறது அந்த ஊரில் ஒரிஜினல் திமுக காரன் ஒருத்தன் கூட இல்லையா இனி பழைய கட்சிக்காரன் நிலைமை எல்லாம் அதோ கதிதான் என்று கதறி புலம்பும் வகையில் பதிவிட்டுள்ளார் திமுகவின் அடிமட்ட தொண்டர். அதுமட்டுமின்றி காலங்காலமாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் ஒரு மாவட்டத்தில் நியமிக்கப்படும் பொறுப்பு அமைச்சர் மாவட்டச் செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் பதவி வரை மற்ற கட்சிகள் இருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது! மேலும் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான திமுகவினர் அதிமுகவினருக்கு வேலை பார்த்து வருகின்றனர். மேலும் உண்மையாக வேலை பார்ப்பவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காததால் பல சீனியர் திமுகவினர் கட்சியை விடுத்து விட்டு தனது சொந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக மோசமான நிலைமையில் இருந்து வரும் சூழலில் தற்பொழுது கொங்கு மண்டலம் மிகவும் மோசமடைந்து வருவது அறிவாலயத்திற்கு தலைவலியை கொடுக்கும் என தெரிகிறது.