தனியார் தொலைக்காட்ச்சியில் விறுவிறுப்பாக இறுதி கட்டடத்தை நோக்கி செல்லும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7 இது கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் புயல் மழை என எது வந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என சொல்லலாம். இந்த நிகழ்ச்சி குறித்து பல விமர்சனம் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, இரண்டு நாட்களில் முடியுவுள்ள இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதும் வெற்றியாளர் பிரதீப் ஆண்டனி என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இடத்தில் அதிகம் இடம் பிடித்தவர் பிரதீப் ஆனால், பெண்களுக்கு மரியாதையை கொடுக்கவில்லை என்று சொல்லி பிக்பாஸ் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பியது மக்கள் இடத்தில் நிகழ்ச்சி மீது ஆற்வம் குறைந்தது. அதன் பின் பழைய போட்டியாளர்களை நிகழ்ச்சி அழைத்து மீண்டும் பார்ப்பரப்பை ஏற்படுத்தினர். ஆனால் பூர்ணிமா மற்றும் மாயாவுக்கும், அவருடன் இருந்த போட்டியாளர்கள் பைனல் நெருங்கும் வேலையில் கூட விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். புல்லி கேங் தொல்லை தாங்கலை என்பதே ரசிகர்களின் கடுப்பாக இருக்கிறது. வைல்ட் கார்டாக 35 நாட்களை கடந்து உள்ளே வந்தவர் அர்ச்சனா.
முடிந்தவரை கண்டெண்ட் கொடுத்தவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது மாயாவும், அவரை சேர்ந்தவர்களும் புரோமோஷன் என்ற பெயரில் வோட்டை விலைக்கு வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கமல் மற்றும் டிவி சைட் கூட மாயாவுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறதாம். கமலும் மாயாவும் ஒரு வித உறவினர் என்று தான் ரசிகர்கள் சொல்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமில்லாமல் விக்ரம் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் உடன் மாயா நெருக்கமாக நடித்திருப்பார். அதனை தொடர்ந்து இந்த சீசனில் மாயா செய்வதுஎல்லாம் கடுப்புதான் ஆனாலும், கமல்ஹாசன் அவருக்கு சப்போர்ட்டாகவே பேசி வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இன்னும் இரண்டு நாட்களில் இறுதி போட்டிக்கு வந்துள்ள பிக்பாஸ் வின்னர் அறிவிப்பில் மாற்றம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிலர். மேலும், அர்ச்சனாவை வின்னராக அறிவித்தால் இரண்டாம் இடத்தில் விஷ்ணு மற்றும் மணி தான் மாற்றி மாற்றி இருக்கின்றனர். கடைசியில் அந்த இடத்தினை மாயாவுக்கு கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என இப்போதே ஆதங்க குரலையும் பார்க்க முடிகிறது. எது எப்படியோ இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை எழுந்த வண்ணம் உள்ளன. ஒருவழியாக மக்களும் ரசிகர்களும் கையெடுத்து கும்பிடு நிகழ்ச்சியை குடித்துவிடுங்கள் என சொல்லாத குறையாக சொல்லி வருகிறன்றனர் என்பதே உண்மை.
அடுத்து வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்கப்போவதில்லை என்றும் படத்திலும் நடிக்காமல் தனது கட்சியில் கவனம் செலுத்த இருப்பதாக சில தகவல் வந்த வண்ணம் உள்ளன. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் அரசியலில் கவனம் செலுத்துவாரா இல்லை அரசியலில் கவனம் செலுத்துவாரா என வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தெரியவரும்.