
2026 சட்டமன்ற தேர்தலில் `ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தைத்தான் மலைபோல நம்பியிருந்தது தி.மு.க தலைமை. அதில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்ட பலரும் இறந்துபோனவர்களும்இடம்பெயர்ந்தவர்கள் தான் அதிகமாம். இந்த விஷயம் அறிவாலயத்துக்கு இப்போது தான் தெரியவந்துள்ளது அதுவும் எஸ்.ஐ.ஆர் பனியின் மூலம் தான் தெரியவந்துள்ளது . ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையை வைத்துத்தான், பூத்வாரியாகக் கணக்கிட்டு, பலமான தொகுதிகளை அடையாளப்படுத்தி வைத்திருந்தது தி.மு.க தலைமை. “இதைத்தான் விடிய விடிய ஒட்டினீர்களா...” என்று பறவை முனியம்மா பந்தாடுவதைப்போல, `ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் உண்மை முகத்தைப் பந்தாடிவிட்டது எஸ்.ஐ.ஆர்.குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலில், 5,000 வாக்குகளுக்குக் குறைவாக 23 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது தி.மு.க. இந்த முறை, எஸ்.ஐ.ஆரின் தாக்கம், விஜய்யின் அரசியல் என்ட்ரி உள்ளிட்ட காரணங்களால் வெற்றி பெறுவதே கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருந்தால் மறுபுறம் முதல்வரின் தொகுதியான கொளத்தூரில், மொத்த வாக்காளர்களாக 2.9 லட்சம் பேர் இருந்தனர். இப்போது, 1.03 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட பிறகு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 1.87 லட்சமாகச் சுருங்கிவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கொளத்தூர் தொகுதியில் சுமார் 1.1 லட்சம் பேர் `ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் கட்சி உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அதன்படி பார்த்தால், முதல்வர் தொகுதியிலுள்ள 60 சதவிகித வாக்காளர்கள் தி.மு.க உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ‘இது சாத்தியமா...’ என்ற கேள்வி முதல்வருக்கே வந்துவிட்டது.
ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தில் கிடைத்த உறுப்பினர் சேர்க்கைத் தரவுகளை வைத்துத்தான், ‘தி.மு.க வலுவாக இருக்கும் தொகுதிகளை’ வகைப்படுத்தியது தலைமை. அதில் 168 தொகுதிகளில், பத்து சதவிகித தி.மு.க உறுப்பினர்கள் எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இனி எப்படி, எந்தக் கணக்கைவைத்து வியூகம் அமைப்பது... `ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையிலும் சரி, எஸ்.ஐ.ஆர் பணிகளிலும் சரி... ஒழுங்காக வேலை பார்க்காமல் தலைமையை ஏமாற்றியிருக்கிறார்கள் பெரும்பாலான நிர்வாகிகள். அவர்களை நம்பி, தலைமை போட்டுவைத்திருந்த திட்டமெல்லாம் தவிடுபொடியாகிவிட்டன”
பூத்திலுள்ள வாக்காளர்களின் விவரங்களைவைத்து, கழக நிர்வாகிகளே தங்கள் இஷ்டத்துக்கு உறுப்பினர் சேர்க்கையைச் செய்தனர். அதை கண்காணிக்க‘பென்’ நிறுவனத்தைக் களமிறக்கியது தலைமை. அவர்களுடைய ஆய்விலேயே, சுமார் 35,000 பூத்துகளில் போலியாக உறுப்பினர் சேர்க்கை நடந்திருப்பது தெரியவந்தது. போலியாகச் சேர்க்கப்பட்ட 10 லட்சம் உறுப்பினர்கள் நீக்கப்பட்டதுடன், மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை நடத்தச் சொன்னது கட்சித் தலைமை. மீண்டும் முயன்றும்கூட ‘ஒரு பூத்துக்கு10 சதவிகித உறுப்பினர்கள்’ என்ற டார்கெட்டை நிர்வாகிகளால் அடைய முடியவில்லை.
இந்தச் சூழலில்தான், எஸ்.ஐ.ஆர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.தி.மு.க-வுக்குச் சுளையாக 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களைக் கொடுக்கக் கூடிய மண்டலம் சென்னைதான். அங்கேயே எஸ்.ஐ.ஆரால் திமுகவுக்கு பாதிப்பு அதிகமாம் இதே போல் தமிழகம் முழுவதும் தி.மு.க வாக்குகளுக்கு ஏதும் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யச் கட்டளையிட்டுள்ளது அறிவாலயம். ஆக மொத்தமாக அப்செட்டாகிக் கொதித்துப் போயிருப்பது முதல்வர் ஸ்டாலின்தான். ‘பூத்துக்கு 30 சதவிகிதக் கட்சி உறுப்பினர்கள். அவர்கள் வாக்களித்தாலே வெற்றி... வெற்றி...’ என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தார். அவரது திட்டத்தில் ஒரு லோடு மண்ணை அள்ளிக் கொட்டியிருக்கிறது எஸ்.ஐ.ஆர். இப்போது, கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, எஸ்.ஐ.ஆரில் விடுபட்டிருக்கும் கட்சி உறுப்பினர்களை, மீண்டும் வாக்காளர்களாக இணைக்கும் பெரும் சவால் அவர் முன்னால் இருக்கிறது. ஆனால் திமுக மீது மக்களே அதிருப்தியில் உள்ளதால் திமுக அரசுக்கு எண்டு கார்டு போடவேண்டிய நேரம் வந்து விட்டத மேலும் பல அமைச்சர்கள்டெல்லி மேலிடத்தில் பேசவும் ஆரம்பித்துவிட்டர்கள் என்பது கூடுதல் தகவல்.
