24 special

நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரதமர் காதுக்கு செல்ல உள்ள முக்கிய தகவல்! அண்ணாமலையின் அடுத்த நகர்வு!

annamalai
annamalai

பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், ஏற்கனவே  முழுமைபெற்ற பல திட்டங்களை திறந்து வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் இன்று கலந்து கொள்கிறார். 


தமிழகத்தை பொறுத்தவரையில் வழக்கமாக பிரதமர் வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்றும், சுவரொட்டியில் எதிர்ப்பு தெரிவித்தும், அவ்வளவு ஏன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சென்னை வந்திருந்தபோது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்ததை அனைவரும் அறிவர்.

ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எதிர்ப்பலை என்பது மைக் பிடித்து பேசுவதில் இருக்கின்றது. மேலும் கடிதம் எழுதுவதில் இருக்கின்றதே தவிர  நேரடியாக பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வரும்போது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் விதமாக திமுக தலைமையிலான தமிழக அரசே கலக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்களும் சமூக வலைத்தளத்தில் மட்டுமே போராடக்கூடிய வர்களும் கூட தங்களுடைய முழு எனர்ஜியை பயன்படுத்தி இன்று எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.


ஆனாலும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பை காட்டிலும் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருக்கின்றது. இப்படியான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, இன்றைய பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு முடிந்த பிறகு தானும் பாஜக வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிக முக்கிய நபர்கள் சென்று பிரதமரிடம் தமிழக அரசியல் களம் குறித்தும் அடுத்த கட்ட நகர்வு குறித்து பேச உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார். 

இதில்  அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்தும், கோவில்களில் நடைபெறும் சில முறைகேடுகள் குறித்தும், அதில் உள்ள அரசியல் தலையீடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பாஜக பிரமுகர் ஒருவரின் கொலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் பேசுவதோடு மட்டுமல்லாமல் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள இப்போதே எடுக்க உள்ள சில அதிரடி நடவடிக்கை குறித்து பிரதமரிடம் தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைத்த தை   தொடர்ந்து, எப்போது மாநில அரசு குறைக்கும் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருக்கும் சமயத்தில், அண்ணாமலை கொடுத்த 72 மணி நேரம் முடிந்த ஒரு தருணத்தில் வரும் 31 ஆம் தேதி சொன்னபடி கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்ததும் இதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் பிரதமரின் வருகையையொட்டி யே, சற்று நிதானமாக அண்ணாமலை செயல்படுவதாகவும் பேசப்படுவதால் இன்றைய நிகழ்வு முடிந்த பிறகு அண்ணாமலையின் அடுத்த பிரஸ்மீட் சூடுபிடிக்கும் என ஆராயத் தொடங்கியுள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.