பாஜகவை சைத்தான் கூட்டணி என்று சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக கடந்த மாதம் பாஜகவில் இருந்து வெளியேறியதாக அறிவித்ததும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதிமுக எந்த அக்காலத்திலும் பாஜகவுடன் கைகோர்க்காது என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சைத்தான் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி உங்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்போ அந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். இனிமேல் பள்ளிவாசல் தெரு, அரசமரத்து தெரு, ஜமாத் தெருவாக இருந்தாலும் சரி, இனி பாஜக உடன் கூட்டணி இருப்பவர்கள் ஓட்டு கேட்டு வராதே என்று இனி யாரும் சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்.தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி. கூட்டணி முறிவால் எடப்பாடி பழனிசாமி 1000 மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார்.
இனி செத்தாலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைப்பயணயத்தில் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களது வீட்டிற்க்கு சென்று நலம் விசாரித்து, அவரின் குழந்தைகளின் கலவி செலவை பாஜக ஏற்கும் என்று தெரிவித்து குடுத்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை அவரிடம் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில், "நாங்கள் விவசாயம் பண்ணி, ஆடு மாடு வளர்த்து அரசியலுக்கு வந்தவர்கள். ஷைத்தானுக்கு பாஜகவில் வேலை இல்லை.
சைத்தானை எதிர்ப்பதற்காக தான் பாஜக உள்ளது. சைத்தானை எதிர்ப்பதால் தான் சிலருக்கு கோபம் வருகிறது என விமர்சித்து கருத்து தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி தொடர்பாக பேசும் போது செந்தில் பாலாஜி ஜாமீன் தள்ளுபடிக்கு நீதிமன்றம் சொன்ன காரணங்களில் அவர் அமைச்சர் பதவியில் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது, இப்பவாது முதல்வர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், நேற்று நடைப்பயணத்தை முடித்து விட்டு சாலையோரத்தில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் காரில் அமர்ந்தபடி உணுவு உண்பது பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது. கொங்கு மக்களின் மனதை வென்று கொண்டிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்று இந்த புகைப்படத்தின் கீழ் சமூக தளத்தில் கமெண்டை பதிவு செய்து வருகின்றனர்.