24 special

நாட்டின் முதல் விரைவு ரயில் சேவையை....பிரதமர் துவக்கி வைத்தார்.!

pm modi
pm modi

இந்தியாவின் அதி விரைவு ரயில் சேவைகளில் பிராந்திய ரயில் சேவையான செமி ஹைஸ்பீடு ரயில் சேவையை இன்று உத்தரப் பிரதேசத்தின் சாஹிபாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடக்கி வைக்கப்பட்து. இந்த ரயில் சேவைக்கு "நமோ பாரத்’' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஷாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ ரயில் நிலையங்களை இணைக்கும் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். அவருடன் பயணித்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். இது நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அதிவேக ரயில்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, பிராந்திய விரைவு ரயில் சேவையான (Regional Rapid Train Service) இதன் பெயர் ‘ரேபிட் எக்ஸ்’ என இருந்தது. நேற்றைய தினம் இதன் பெயர் ரேபிட்எக்ஸ் என்பதிலிருந்து நமோ பாரத் என மாற்றப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாட்டில் அதிவிரைவு ரயில், வந்தே பாரத்தை தொடர்ந்து, நமோ பாரத் தொடங்கப்பட்டுள்ளது.82-கிமீ தூரம் கொண்ட பாதையில் 17-கிமீ முதன்மை பிரிவாக சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய 5 நிலையங்களில் சனிக்கிழமை முதல் பயணிகளுக்கான செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன. இந்த ரயில்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். தொடங்குவதற்கு, ரயில்களின் அதிர்வெண் 15 நிமிடங்களாக இருக்கும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் அதிகரிக்கலாம்.

இந்த ரயிலின் வேகமானது 180 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது, உள் நாட்டிலேயே இதனை தயாரித்தது என்பது நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளது. "டெல்லி-காசியாபாத்-மீரட் ரயில் சேவை ரூ.30,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் காசியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தில் டெல்லியை மீரட்டுடன் இணைக்கும்," பிரதமர் மோடியின் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சிறப்பு அம்சமானது, 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலில் மொத்தம், 6 குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகள் உள்ளது. அதில் ஒன்று சொகுசு வசதி கொண்ட முதல் வகுப்பு  பெட்டி மற்றொன்று பெண்கள் பேட்டி. மீதமுள்ள 4 பெட்டிகளும் சாதாரண பெட்டிகளாக இருக்கும்.இந்த ரயிலின் ஒரு பெட்டியில் 72 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.