திமுக எப்ப எந்த அறிக்கை விடும், திமுகவினர் எதை எல்லாம் மாற்றி பேசுகின்றனர் என்பதனை கழுகு போன்று பார்த்து வரும் அண்ணாமலை தங்க நாற்கர சாலையை அமைத்து தந்தவர் டி ஆர் பாலு அல்ல..மக்கள் காதுல பூ சுத்த வேண்டாம்...தங்க நாற்கர சாலை திட்டம் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டம் என்பது உலகத்துக்கே தெரியும் என குறிப்பிட்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் தேதியையும் சில நிகழ்வையும் ஆதாரத்தோடு பதிவிட்டு ஆளும் கட்சியை டென்ஷன் ஆக்கி உள்ளார் அண்ணாமலை.
கலைஞரை கைது செய்ய வந்த போது எப்படி சண்டைக்கு வந்து நின்றாரோ அதேபோன்று... மிசா காலத்தில் எனக்காக வந்து நின்றவர் டி ஆர் பாலு. நாங்கள் இருவரும் அவ்வளவு நெருக்கமானவர்கள்...இப்போதுதான் அவருடைய பதவிக்கு ஏற்றவாறு வாங்க போங்க என்று பேசுகிறேன். ஆனால் 1970 முதல்... எங்கள் பழக்கம் வாயா போயா என்றும் வாடா போடா என்றும் பேசும் அளவுக்கு நெருக்கமாக இருந்தோம்...
சிறையிலும் ஒன்றாக இருந்தோம்... இதற்கு முன்னதாக அண்ணாவோ, பேராசிரியர் அவர்களோ சுயசரிதை எழுதவில்லை.ஆனால் கலைஞர் எழுதினார் . இருப்பினும் 2002 ஆம் ஆண்டு வரை மட்டுமே இருக்கின்றது... அதற்குப் பின் இல்லாததால் பல முக்கிய தகவல்கள் நாம் அறிய முடியாமல் இருக்கின்றது. ஆனால் டி ஆர் பாலு அவர்கள் பாதை மாறா பயணம் என்ற தலைப்பில் நூல் எழுதி இருக்கிறார் என பெருமிதம் பேசிய முதல்வர், தமிழகத்திற்கு தங்க நாற்கர சாலையை அமைத்து தந்தவர் டி ஆர் பாலு என்று புகழாரம் சூட்டியிருந்தார். இதனை நோட்டீஸ் செய்த அண்ணாமலை அடுத்த நொடியே ஆதாரத்தோடு ஒரு அறிக்கையை வெளியிட்டு ஆளும் தரப்புக்கு பதிலடி கொடுத்திருக்கார்.
அதுல...அடுத்தவர்கள் சாதனை எல்லாம் அறிவாலயத்தின் கணக்கிலே வரவு வைத்துக் கொள்ளும் அவருடைய பழக்கம் இன்னும் மாறல.... உலகத்துக்கே தெரியும் தங்க நாற்கர சாலை திட்டம் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவு திட்டம் இந்த திட்டத்தை ஜனவரி மாதம் ஆறாம் தேதி 1999 ஆவது ஆண்டு தொடங்கி வைத்தார். அப்போது தமிழகத்தில் நாற்கர நெடுஞ்சாலை திட்டத்தை தொடங்கி வைத்தவர் பிசி கந்தூரி. 7.11.2000 முதல் 22.5.2004 வரை நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தார். சென்னை மும்பைக்கு இடையே 1290 கிலோமீட்டர் வரை நிறைவேற்றப்பட்ட நாள் 31.08.2011. சென்னை கொல்கத்தா இடையே 1684 கி மீ வரை நிறைவேற்றப்பட்ட நாள் 31.5.2013.
ஆனால் மக்களே இங்கதான் ட்விஸ்ட். டி ஆர் பாலு நெடுஞ்சாலை துறை அமைச்சராக பதவி வகித்த காலம் 22.5.2004 முதல் 22.5.2009 வரை. ஆக ஜூலை மாதம் 2013ல் இந்த திட்டம் முழுமையாக நிறைவேறியது.ஆக தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாமல் இடையில் அமைச்சராக இருந்தவர் எப்படி திட்டத்தை தன்னுடைய தனிப்பட்ட சாதனையாக கூற முடியும்? அது எப்படி நா கூசாமல் பாஜகவின் சாதனைகளை எல்லாம் தங்கள் சாதனைகளாக சொல்லி கொள்கிறார்களோ தெரியவில்லை.டி ஆர் பாலு அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை என்பது இந்த தங்க நாற்கர சாலை திட்டத்தில் காண்ட்ராக்டர்களிடம் கணிசமான அளவு கட்டாய வசூல் செய்தது மட்டுமே. என்று தன்னுடைய அறிக்கையில் காரசாரமாக பதில் அளித்து இருக்கின்றார்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியாக செயல்படக்கூடிய பாஜக தலைவர் அண்ணாமலை இது போன்ற ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை என்றால் தமிழக மக்களும் தங்க நாற்கர திட்டத்தை கொண்டு வந்தவர் டி ஆர் பாலு என்று தான் நினைத்திருப்பார்கள்.
நல்ல வேலையாக அண்ணாமலை சா தூர்த்தியமாகபுள்ளி விவரத்தை விரல் நுனியில் வைத்திருப்பதால் கடகடவென அறிக்கை தயாரித்து ஆதாரத்தோடு வெளியிட்டு எது சரி எது தவறு எது உண்மை எது பொய் என்பதை விளக்கி இருப்பதாக பாஜக வினர் சமூக வலைத்தளத்தில் அண்ணாமலையை கொண்டாடி வருகின்றனர்.பொதுமக்களும் அண்ணாமலையின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.