பஞ்சாப் : கடந்த சிலவருடங்களாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலும் ஆம் ஆத்மீயின் வளர்ச்சிக்கு பிறகு காலிஸ்தானின் எழுச்சி அதிகரித்திருப்பதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். சி.ஏ.ஏ போராட்டம் விவசாயிகள் போராட்டம் என பல போராட்டங்களில் அவர்களின் கை ஓங்கியிருந்தது.
இந்திய பாராளுமன்றத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றுபவர்களுக்கு பலகோடி ரூபாய் பரிசும் அறிவித்திருந்தது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு. மேலும் நேற்று முன்தினம் ஹிமாச்சல பிரதேச சட்டசபையிலேயே காலிஸ்தான் வாசகங்கள் பொறிக்கப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அமைந்துள்ள காவல்துறையின் உளவுத்துறை தலைமையக அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் திங்கட்கிழமை இரவு RPG ரக கையெறிகுண்டு ராக்கெட் ராஞ்சர் மூலம் வீசப்பட்டதாக தெரிகிறது. இதில் யாருக்கும் உயிர்சேதம் இல்லை. ஆனால் ஜன்னல் கதவுகள் மற்றும் கம்பிகள் பலத்த சேதம் அடைந்துள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சண்டிகார் எஸ்.எஸ்.பி குல்தீப் சாஹல் மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தார். போலீசாரின் கூற்றுப்படி காவல்துறையின் உளவுத்துறை தலைமையகத்தில் சரியாக இரவு 7.45 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தடயவியல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர். ஆம் ஆத்மீ அரசின் மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வரும்வேளையில் இந்த சம்பவம் மேலும் சிக்கலை கொடுத்துள்ளது.
கெஜ்ரிவால் விவசாய போராட்டத்தின் போது டெல்லி செங்கோட்டை பகுதியில் போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கிய விவகாரம் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியிருந்தது. அப்போது நடந்த போராட்டத்தில் தேசிய கொடி இறக்கப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.