24 special

பேரதிர்ச்சியில் திருமாவளவன்...! களத்தில் இறங்கிய அண்ணாமலை..! நடந்தது என்ன ?

Annamalai,thirumavalavan
Annamalai,thirumavalavan

அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் கடுமையாக பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கங்களை எதிர்க்க களம் இறங்கிய திருமாவளவன் தற்போது கடும் அதிர்ச்சியில் சிக்கி இருக்கிறார் வழக்கமான தமிழக அரசியல் என்றால் எளிதில் தப்பித்து விடலாம் ஆனால் இந்த முறை நாடு முழுவதும் அம்பலபட்டு இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.


தனி தமிழ்நாடு அமைவதே தீர்வு என திருமாவளவன் பேசியதற்கு கடுமையாக கண்டனம் பதிவு செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார் இராணுவ வீரர் குருமூர்த்தி, இந்த நிலையில் குருமூர்த்தியை தொடர்பு கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலர் குருமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுதனர்.

பணியில் உள்ள நாட்டை காக்கும் ராணுவ வீரருக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது...நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் உண்டாக்கியது.. முன்னாள் இராணுவ வீரர்கள் பலரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் குரு மூர்த்தியை தொடர்பு கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உங்கள் உடன் நாங்கள் இருக்கிறோம் உங்கள் குடும்பத்தினரை தொடும் அளவிற்கு அவர்களுக்கு நெஞ்சில் உரம் இருக்காது அதையும் மீறி அவர்கள் ஏதாவது நினைத்தால் கடும் பதிலடியை சட்ட ரீதியாக மட்டும் இருக்காது என அண்ணாமலை உறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கமான அரசியல் என்றால் அதில் ஏதாவது அரசியல் நிலைப்பாடு எடுத்து விடலாம் ஆனால் இராணுவ வீரருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கட்சியினர் ஈடுபட்டது பெரும் பின்னடவை விசிகவிற்கு கொடுத்துள்ளது, தேசிய அரசியலில் கால் பதிப்பதற்காக தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, இன்னும் பிற தேசிய தலைவர்களை சந்தித்து தன்னை மாநிலம் கடந்த  பட்டியல் சமுதாய தலைவராக உருவகப்படுத்த நினைத்த திருமாவளவனுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்க படுகிறது.

ஏற்கனவே தனி தமிழ்நாடு என பேசியது மிக பெரிய சட்ட சிக்கலை உண்டாக்கி இருக்கும் சூழலில் இப்போது பணியில் உள்ள இராணுவ வீரர் குருமூர்த்திக்கு விசிக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் இராணுவம் வரை சென்று இருப்பதால் கனவிலும் எதிர்பார்க்காத சிக்கலை சந்தித்து இருக்கிறார் விசிக கட்சியின் தலைவராக திருமாவளவன்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து மொழி, மதம், இராணுவம், தனி நாடு என திருமாவளவன் மற்றும் அவரது கட்சி சிக்கலில் சிக்கி இருக்கும் சூழலில் இனி வரும் நாட்களில் மிக பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை அந்த கட்சி எதிர்கொள்ள நேரிடும் என்பது மட்டும் தெளிவாக மக்களுக்கு உணர்த்தி இருக்கிறது.