அதிமுக கட்சியில் மிக பெரிய பிளவு ஏற்படும் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது. அதிலும் ஜூன் நான்கு பிறகு அதிமுக தலைமையே மாற்றப்படும் என ஒரு பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது அதிமுக கட்சியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகும் அந்த பரபரப்பு குறையாமல் இருந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெரியதாக ஒரு தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்ற நிலைமை தொடர்ந்தது. அதிமுக இந்த தேர்தலோடு கடைசி என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு செல்லும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அது போலவே இந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட முழுமையாக வெற்றி பெறாது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
ஏற்கனவே, தேர்தல் முடிந்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்செட்டாக இருந்து வந்தார் அதுமட்டுமில்லாமல் உளவுத்துறை மூலம் கிடைத்த ரிப்போர்ட்டில் அதிமுக வெற்றி என்பது கேள்வி குறி என்றும் தகவல் கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில், அதிமுக உட்கட்சியில் அவருக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு பூகம்பம் கிளம்பியுள்ளது. அதிமுக கட்சிக்கு எடப்பாடி பொறுப்பேற்ற பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அந்த கட்சி. இடைதேர்தல், உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து ஒன்பது இடத்தில தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றால் 10வது முறையாகும். இதனால் அதிமுக இந்த தேர்தலில் பெரும்பான்மையை காட்டவில்லை என்றால் பெரும் சிக்கலை முன்னாள் அமைச்சர்களும் கட்சி மூத்த தலைவர்களும் ஒரு கலக்கத்தில் இருந்து வருகிறார்களாம்.
இந்த சூழ்நிலையில், அதிமுக கட்சி லோக்சபா 2024 தேர்தலில் பெரிய அளவில் இடங்களை குவிக்காது என்று கட்சி தலைமை தகவல்கள் சென்றுள்ளதாம். இதன் காரணமாகவே தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். இதனால் சமீபத்தில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளுக்கு கூட மூத்த தலைவர்கள் யாரும் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்பது அதிமுகவில் விரிசல் என பேசபட்டுவருகிறது. இதனால், அதிமுக கட்சி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், அதிமுக முக்கிய புளிக்களுக்கு எடப்பாடி தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைவருக்கும் தொலைபேசியில் பண்ணி ஒரு வார்னிங் கொடுத்துள்ளாராம், இந்த தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு எங்கு சாதகமாக இல்லையோ அங்கு எல்லாம் கலை எடுப்பதாகவும், அதிமுகவில் பிளவு என்பது இல்லை தொடர்ந்து இதனை பொது வெளியில் சொல்லவும் உத்தரவிட்டுள்ளாராம். அதன் காரணமாகவே, கொங்கு பகுதி முக்கிய தலைவர் அதிமுகவில் பிளவு இல்லையென்றும், சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அதிமுக வெற்றி பெரும் என கூறினார். மேலும், ஜூன் 4 பிறகு அதிமுகவில் முக்கிய சரிவு ஏற்படலாம் எது வந்தாலும் ஒன்றாக இருந்து சமாளிப்போம் என அறிவுரை வழக்கியுள்ளாராம். இந்த தேர்தலுக்கே அதிமுகவில் இப்படி ஒரு பிரச்சனை என்றால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக எப்படி சந்திக்க போகிறது எடப்பாடி இதெயெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.