முன்னாள் அரசு அதிகாரியும் youtubeபராகவும் அரசியல் விமர்சகராகவும் வலம் வந்த சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த நான்காம் தேதி கைது செய்யப்பட்டார். அதாவது சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வந்த சவுக்கு சங்கர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றில் பேசிய பொழுது தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார் அதனால் அதற்கு எதிராக காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். இதன் காரணமாக தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை நகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அப்படி சங்கரை கைது செய்து அழைத்து வரும்பொழுது சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சவுக்கு சங்கத் தலை உள்ள அறையை அதிகாரிகள் சோதன்தனர்.
அப்பொழுது அங்கிருந்து கஞ்சா மற்றும் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் அதனால் அவருடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கரை ஆஜர் படுத்த மே 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயிலில் அமைந்து இருந்த சவுக்கு சங்கரின் வீடு மற்றும் சென்னை தியாகராய நகரில் இருந்த அவரது அலுவலகத்திலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதற்குப் பிறகும் மேலும் சில வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்,.
அது மட்டும் மின்றி சேலத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறியை சேர்ந்த காவல்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் அடிப்படையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அதோடு தமிழக முன்னேற்ற படை கட்சியை நடத்தி வருகின்ற வீரலட்சுமி என்பவனும் கடந்த மே எட்டாம் தேதி அளித்த புகாரியின் அடிப்படையில் சவுக்கு சந்தர பேட்டி எடுத்த யூடியுப் சேனல் ஆசிரியரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதனால் அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது போதாதென்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போலி ஆவணங்களை வைத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த தவறான கருத்துக்களை சவுக்கு சங்கர் பரவியதாக புகார் ஒன்றையும் பதிவு செய்வது இப்படி தொடர்ச்சியாக சவுக்கு சங்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது அண்ணன் எப்ப சாவான் தின்னையை எப்ப பிடிக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ற வகையில் என்று இந்த சவுக்கு சங்கர் மாட்டுவார் தொடர்ச்சியாக அவர் மீது வழக்குகள் போடலாம் என பலர் காத்துக் கிடந்தது போன்று தொடர்ச்சியாக அவர் மீது வழக்குகள் பாய்ந்ததுள்ளது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக பிரபல பத்திரிகையாளர் செல்வராஜ் கூறியுள்ளார். அதாவது, லஞ்ச ஒழிப்புத்துறை சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் சவுக்கு சங்கர் தனது நெருங்கிய நண்பர்கள் பெயரில் வாங்கிய பினாமி சொத்துகளின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டவர் அதோடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையும் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். இது youtube விமர்சகர்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளது.