24 special

சூர்யாவின் பொங்கல் வாழ்த்தில் எழுந்த சர்ச்சை...!

Suriya
Suriya

நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். பஸ் வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்படும் என்றும், படிப்பை அவர்கள் பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார். அத்துடன் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. 


இதனால் கல்வி தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் கண்டித்தார். இந்த நிலையில் சூர்யா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் தரம் மேம்படும் என்றும் வலைத்தளத்தில் சிலர் பேசிவருகிறார்கள். சூர்யாவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பா.ஜனதா பிரமுகர் எச்.ராஜா கண்டித்துள்ளார். திமுகவிற்கு உயிரையும் கொடுப்பார் என்று சமூக தலத்தில் கண்டனம் வலுத்தது.

இந்நிலையில் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரியாடிக் பிலிம் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதனுடைய இரண்டாவது போஸ்டர் வெளியாகிள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா அது பல மொழிகளில் வெளியாவதால் பல மொழிகளில் வாழ்த்து தெரிவித்தார். ஹிந்தியிலும் வாழ்த்து தெரிவித்தார் இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக இருந்த சூர்யா தனது படத்திற்காக இந்த லெவலுக்கு இறங்குவாரா என கேள்வி முன்வைத்து வருகின்றனர். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்ததாக சுதா கொங்கரா தயாரிப்பில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கல்லுரி மாணவராக நடிக உள்ளார் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கெனவே வெளியான நிலையில் அந்த படமும் ஹிந்தியில் ரிலீசாகும் பொது எப்படி பதிவிடுவார் சூர்யா. ஒரு படத்திற்காக இவ்ளோ இறங்க கூடாது என்று தெரிவிக்கின்றனர். மேலும், சூர்யா தற்போது மும்பையில் தனது மனைவியடன் விழாக்களை கொண்டாடி வருகிறார். அவரது குழந்தைகளும் மும்பையில் தான் படித்து வருகிறார். அதனால் தான் அவர் ஹிந்தி  மொழியை பின் பற்றுகிறார் என விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. சூர்யாவின் படங்கள் கடைசியாக திரைக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது, இதனால் ஹிந்தியில் பேச சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை என பேசப்படுகிறது.