Cinema

ரஜினிகாந்த் வீட்டில் ரசிகர்களுக்கு சவால் விட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

Rajinikanth
Rajinikanth

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு அவரது வீட்ற்கு வந்த ரசிகர்களை நேற்று சந்தித்தார். அப்போது ரஜினியின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவர் சரமாரியாக திட்டியுள்ளார் ரசிகர்கள் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பிரபல திரைவிமர்சகர் ப்ளு சட்டை மாறன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்ன போதுதான் ரசிகர்களை அருகில் நின்று சந்தித்தார். அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த பின் ரசிகர்களை அருகில் வைத்து கொள்ளவில்லை என்பது பேசு பொருளாக மாறியது. கடந்த மாதம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்க முயன்ற போது அவர்களை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை இதனால் ரசிகர்கள் கண்ணீரோடு சென்றனர். தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் ரஜினிகாந்த் வீட்டிற்கு ரசிகர்கள் குவிந்தனர், அப்போது வாழ்த்து தெரிவித்ததோடு ஒரு கருத்தையும் தெரிவித்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஒரு குடும்பம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 

அதாவது, நல்ல நாளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை "ஒவ்வொரு பண்டிகைக்கும் வீட்டு முன் சத்தம் கேட்கிறது.வீட்டுக்கு முன்னாடி வந்து கத்தி கூச்சலிடுவதா நல்ல நாளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என பக்கத்து வீட்டு மூதாட்டி டென்ஷனாக கூறியுள்ளார். மேலும், ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல்.. இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா? என கேள்வி முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ப்ளு சட்டை மாறன் இணையத்தில் தெரிவித்திருப்பது. 

தன் வீட்டு மெயின் கேட்டில் இருந்து பல அடி தூரத்தில் ரசிகர்களை நிறுத்தி... கேட் பின்புறம் ஸ்டூலில் ஏறி கும்பிடு போடுவது தலீவரின் வழக்கம். ஆகவே.. பக்கத்துவீட்டு அருகில் ரசிகர்கள் நிற்பார்கள். நேற்று நடந்த சம்பவத்தில்.. பக்கத்து வீட்டார் அதிகாலையில் எழுந்து  மணிக்கணக்கில் போட்ட பொங்கல் கோலத்தை ரசிகர்கள் கால்களால் மிதித்து கலைத்து விட்டார்கள்.

அந்த அம்மா குடும்பத்துடன் இறைவனை வணங்கும்போது..டைமிங்காக.. தலைவர் வெளியே வந்து வணக்கம் போட.. 'தலைவா தலைவா' என கோஷம்.‌ அம்மாவால் நிம்மதியாக உள்ளே கும்பிடவும் இயலவில்லை. வெளியே வந்து பார்த்தால் கோலம் அலங்கோலமாகி இருந்தது. அந்த அம்மா அப்படியே ரஜினி வீட்டு வாசலை பார்த்தார். அது.. சற்றும் கலையாமல் ஜம்மென்று இருந்தது. அதன்பிறகுதான் தலீவருக்கும், ரசிகர்களும் பொங்கல் வைத்து அதிரடி காட்டினார் அந்த அம்மா. போயஸ் கார்டன் அம்மா என்றாலே தலைவருக்கு எப்போதும் பீதிதான் எனும் வரலாறு தொடர்கிறது. என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு கீழ் உங்களக்கு எதுக்கு தேவையில்லாத பேச்சு திரை மட்டும் விமர்சனம் செய்தால் போதும் எதற்கு நெகட்டீவ் எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்துறீங்க என மாறனை சரமாரியாக நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.