
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கிய நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் கார் பயண விவரங்கள் முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகின்றன. விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.எப்போதும் போல “வழக்கமான குண்டுவெடிப்பு” என்று விசாரணையை துவக்கி விட முடியாது என்பதை உணர்த்தி இருக்கிறது டில்லி கார் குண்டுவெடிப்பு. பொதுவாக பயங்கரவாதிகள் கல்வியறிவு குறைந்தவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணமே பலரிடம் நிலவுகிறது. ஆனால், உலகம் முழுவதும் நடைபெற்ற பல பயங்கரவாதச் சம்பவங்கள் அந்த எண்ணத்தையே முறியடித்துள்ளன.
இப்போது,வெள்ளை காலர் பயங்கரவாதம் (White Collar Terrorism)” என்ற புதிய திசையில் பயங்கரவாத இயக்கங்கள் நகர்ந்து வருகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக பார்க்கப்படுவது டில்லி குண்டு வெடிப்பு சம்பவம். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரண குற்றவாளிகள் அல்ல மருத்துவர்கள். அதிலும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும், உயர்கல்வி பெற்ற எம்.டி. மருத்துவர்கள். மக்களுடன் எளிமையாக பழகும் தோற்றத்துடன் இருந்த இவர்களே தீவிரவாதிகள். தற்போது புலனாய்வின் வலையில் சிக்கியுள்ளனர். இந்த கார் குண்டு வெடிப்பு ஒரு “ஒயிட் காலர் பயங்கரவாதம்” எனக் கூறப்படுவதற்கு அதுவே காரணம்.
மதப் பிரசாரகர்கள் என கிராமப்புறங்களில் தொடங்கி , தலைசிறந்த பல்கலைக்கழக மாணவர்கள் வரை மூளைச்சலவை செய்வது என யங்கரவாதத்தின் நிழல் வேறு வேறு ரூபங்களில் உலாவுகிறது. இவர்களின் வலையமைப்பு மிகச் சிக்கலானது — பள்ளி வகுப்பறைகள், மருத்துவமனைகள், பெருநிறுவனங்கள், அரசு துறைகள் என பல தளங்களில் இவர்களின் தாக்கம் பரவி இருக்கிறது.இதற்ககு காரணம் ஒட்டு வாங்கி அரசியலும் கூட. சில மதத்தை சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக ஒரே கட்சிக்கோ அல்லது அணிக்கோ தங்களின் ஓட்டுக்களை போட்டுவிடுகிறார்கள் அதனால் அந்த மதத்தை சேர்ந்த மர்ம நபர்கள் என்ன தவறு செய்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது சில மாநில அரசுகள். அதுமட்டுமா அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கபடுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளும் மர்ம மதம் தேசத்திற்கு எதிராக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாலும் சிறுபான்மைக்கு எதிராக நடவடிக்கை என கூற ஆரம்பித்து விடுகிறார்கள. ஓட்டுக்காக மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளது சில அரசியல் கட்சிகள்!
2011 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி பெற்றவர்கள். முன்னணி கடத்தல்காரனான முகமது அட்டா கெய்ரோ பல்கலையில் கட்டிடக் கலை படித்தவன்; பின்னர் ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலையில் நகர்ப்புற வடிவமைப்பில் முதுகலை பட்டம் பெற்றவன்.”அதேபோல், ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் இங்கிலாந்து, சூடான் போன்ற நாடுகளில் இருந்து மருத்துவ மாணவர்களையும், இளம் மருத்துவர்களையும் ஆள்சேர்த்தது. இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை நடத்தியவர்களும் செல்வந்த வணிகக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அபூபக்கர் அல் பாக்தாதி இஸ்லாமிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவன்; ஒசாமா பின் லேடன் பொறியியல் பட்டதாரி. இவர்கள் கல்வியால் பிரபலமானவர்களாக இருந்தாலும், உலகம் தேடிய கொடூரமான பயங்கரவாதிகளாக மாறினர்.அந்த வரிசையில், டில்லி குண்டுவெடிப்பிலும் சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவர்கள் என்பதே புலனாய்வை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஷாஹீன் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா, அதுவும் தலைநகர் டில்லியில் இத்தகைய வெள்ளை காலர் பயங்கரவாதம் தோன்றியுள்ளது
