24 special

திருப்பரங்குன்றம்... நீதிமன்றம் கொடுத்த கனவிலும் எதிர்பாராத அதிரடி. .. அடித்து சொன்ன நீதிபதி... மிரண்டு போன சமத்துவ கூட்டம்

SEKARBABU,G.R.SWAMINATHAN
SEKARBABU,G.R.SWAMINATHAN

தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் முதலாவதாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்தை எங்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்த விவகாரம் இந்த ஆண்டு பெரியவிவாதத்தை  ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதம்  தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை வரை வந்து, அரசின் இந்து சமய அறநிலையத் துறையே சட்ட ரீதியாக விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவானுள்ளது. மதுரை ராம ரவிக்குமார் எனும் பொதுமகன் தாக்கல் செய்த மனுவே இந்த விவகாரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.


மனுதாரர், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து நடைமுறையில் உள்ள பாரம்பரியம்  இதனை விலக்கிக் கொண்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டிருப்பது சட்டவிரோதமானதுமாகவும், முந்தைய உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானதுமாகவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மலை உச்சியில் உள்ள இடம் தெய்வீகச் சின்னமாகவும், முருக பக்தர்களின் மனதில் தனித்துவமான இடத்தையும் வகிப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவிற்காக, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதற்குப் பதிலாக, உச்சிப்பிள்ளையார் கோயிலின் அருகில் அமைந்துள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்குப் பிறகே மனுதாரர் நீதிமன்றத்தை அணுகினார். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது மனுவை எடுத்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அறநிலையத் துறை இந்த முடிவை எந்த அடிப்படையில் எடுத்தது என கேள்வி எழுப்பினார். துறை தரப்பு சார்பில், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றும் திட்டம் செய்யப்படவில்லை என்ற காரணம் முன்வைக்கப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதி, “யாரை கண்டு பயப்படுகிறீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பினார். நீதிபதியின் இந்த கேள்வி நிறைய பொருளைக் குறிக்கிறது என்று நீதிமன்றத்தில் இருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர். பொதுமக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள், கோவிலின் வரலாற்றுப் பின்னணி, பக்தர்களின் உணர்வு போன்றவை இவ்வாறு புறக்கணிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தையும் நீதிபதி வெளிப்படையாகக் குறிப்பிட்டதாக நீதிமன்ற வளாகத்தில் பேசப்பட்டது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்து சமய அறநிலையத் துறை இந்த முடிவை எதற்காக எடுத்தது என்பது குறித்து சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் விரிவாக விளக்கத்தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை ரத்து செய்யும் கோரிக்கையைப் பற்றியும் விரிவான ஆராய்ச்சி தேவைப்படுவதாகக் கூறி, தனிப்பட்ட காரணங்களை மட்டும் குறிப்பிடுவது போதாது என்றும் நீதிபதி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

கார்த்திகை தீபத்திருவிழா தமிழர்களின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாகும். குறிப்பாக இந்து  பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதை தெய்வீகச் சின்னமாகக் கருதி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் அந்த தருணத்தைப் பார்ப்பதற்காக மலைமேல் ஏறுவது வழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட பாரம்பரியத்தை மாற்றுவது எப்படி, ஏன், யார் கோரிக்கையின் அடிப்படையில் என்ற அனைத்தும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையில், கோவிலின் பாரம்பரியமும், பக்தர்களின் உணர்வுகளும் பாதுகாப்பு தேவைகளோடு இணைந்தே துறை முடிவெடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்த அறநிலையத் துறையின் முழுமையான பதிலை நீதிமன்றம் கோரியுள்ளதால், அடுத்த விசாரணைக்கு அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. நீதிமன்றம் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ பதில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதில் மட்டுமே இந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் எங்கு ஏற்றப்படும் என்பதற்கான இறுதி முடிவைத் தீர்மானிக்கும் என்று கோவில் வட்டாரங்களும் பக்தர்களும் கவனத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.