24 special

முக்கியமான கட்டத்தை நெருங்கும் என் ஐ ஏ சிக்கப் போவது யார்

alunar maligai,alunar
alunar maligai,alunar

சென்னை கிண்டியில் அமைந்துள்ளது தமிழக ஆளுநரின் மாளிகை, அப்பகுதி மிகவும் அதிக பாதுகாப்புகளை கொண்டது ஆளுநரை பார்க்க வேண்டும் என்றாலே பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு தமிழக ஆளுநரை பார்க்க முடியும் இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஆளுநர் மாளிகை வழியாக நடந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென காவலர்கள் கவனிக்காத நேரத்தில் ஆளுநர் மாளிகையில் நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பித்து ஓடினார். 


இருப்பினும் மாளிகையின் முன்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்தனர். அதற்குப் பிறகு கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார் பிறகு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தமிழக காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் குண்டு வீசிய நபரின் பெயர் கருக்கா வினோத் என்றும் இவர் தமிழக ஆளுநர் நீட் விலக்கிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற காரணத்திற்காக இந்த பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கூறுகிறார் என தெரிவித்தது. ஆனால் இந்த விவகாரம் தமிழகத்தின் தலைநகரில் தமிழகத்தின் ஆளுநருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற அச்சத்தை தமிழக முழுவதிலும் ஏற்படுத்தியது காவல்துறை மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. 

அதற்கு பிறகு ஆளுநர் மாளிகை தரப்பில், ஆளுநர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ஆனால் அந்த புகார்கள் அனைத்தும் முதல் அறிக்கையில் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் குற்றம் தெரிவித்தது. இதனை அடுத்தும் அவசர அவசரமாக விடுபட்ட வரை கைது செய்து நள்ளிரவில் மாஜிஸ்ட்ரேட்டை எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதாகவும் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விரிவான விசாரணை எதுவும் நடைபெறவில்லை தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் ட்விட்டர் பக்கத்தில் காவல்துறையில் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 

ஆளுநர் மாளிகையின் இந்த பதிவிற்கு உடனடியாக தமிழக காவல்துறை ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியது ஒரே ஒரு நபர் மட்டுமே அவர் கருக்கா வினோத் என்றும் இதற்கு முன்பாக ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆளுநருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அறிக்கையாக சமர்ப்பித்தது. இதனை அடுத்து மத்திய இணை அமைச்சர் ராஜ்பவனில் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்திருந்தார். இதனை அடுத்து நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநர் மாளிகையில் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு என் ஐ ஏ விடம் ஒப்படைக்கப்பட்டது. 

வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ தீவிர விசாரணையில் இறங்கியதோடு குற்றம் சாட்டப்பட்டவரை தன் காவலில் எடுத்து மேலும் விசாரணை மேற்கொண்டது. கவர்னர் மாளிகையும் குண்டு வீசப்பட்ட பகுதியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்ற பொழுது பணியில் இருந்த காவல் அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை முடிவெடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் முக்கிய சில அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய திறனாய்வு முகமை யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி கருக்கா வினோத் விவகாரத்தின் முக்கிய புள்ளியை என் ஐ ஏ விசாரணை மூலம் நெருங்குகிறது எனவும் இன்னும் சில மாதங்களுக்குள் இதன் பின்னணி பற்றிய தகவல்கள் தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன