தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கஸ்தூரி தற்பொழுது அதிக படங்களில் நடிப்பதில்லை இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் ஒரு சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது எனக்கு தோன்றும் சில கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு சில விமர்சனங்களுக்கு உள்ளாவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். எனினும் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு மக்களின் பார்வையில் பட்டார். அந்த நிகழ்ச்சியில் கஸ்தூரி நடிகர் கமலஹாசனிடம் மிகவும் மரியாதையாகவும் இந்தியன் படத்தில் தனது அப்பாவாக நடித்த கமல் என்ற தோற்றத்திலேயே அவரிடம் உரையாடியும் சில கேள்விகளை கேட்டும் அந்த நிகழ்ச்சி தனது ஆட்டத்தை ஆடினார்.
அதற்குப் பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இவர் பேசும் சில கருத்துக்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகையின் கஸ்தூரி உலகநாயகன் கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது சென்னையை கடந்து சென்ற மிக்ஜம் புயலால் சென்னை பகுதி முழுவதும் மழை நீர் தூங்கியது மழை நின்று கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு சென்னையில் ஒரு சில பகுதிகள் வெள்ள நீரில் இருந்து மீண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இருப்பினும் சென்னை புறநகர் வெள்ள பாதிப்பில் மீண்டு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நடிகர் கமலஹாசனும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்தவர் தற்பொழுது மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கிய மற்றும் தற்போதைய பணி, மேலும் இந்த நேரமானது அரசை குறை கூறுவதற்கான நேரம் அல்ல ஒரு கோடி பேருக்கும் அரசின் இயந்திரம் சென்று சேரும் என்பது சாத்தியமில்லாத ஒன்று இதனால் எதிர்காலத்தில் இதுபோன்று மழை ஏற்பட்டாலும் மழை பாதிப்பு இல்லாதபடியான நடவடிக்கைகளை வழிமுறைகளுடன் இணைந்து திட்டமிட்டு அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். கமலஹாசனின் இந்த கருத்து எதிர்வினை பெற்றது, இதற்கிடையில் அரசியலில் இருக்கும் இவர் படமும் நடிக்கிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார் எனவும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி கமலின் இந்த கருத்தை மேற்கோள் காட்டி 'That படுத்தே விட்டானய்யா moment'. மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது என்று பதிவிட்டு நடிகர் கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக சென்னையில் கனமழை பெய்த அன்றே, அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்.
இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவும் இதற்கு முன்பாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பொழுது உலகநாயகன் பதிவிட்ட பதிவும் சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்தை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து உலகநாயகன் விமர்சிக்கப்பட்டு வருவது சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.