சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டம் முடிவதற்குள் அடுத்த போராட்டம் தொடங்கிவிட்டது.திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது, மக்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதே உண்மை. அந்த வகையில் தற்போது செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், திமுக தேர்தல் வாக்குறுதி 356ன் படி, ஆட்சிக்கு வரும்பொழுது தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்வோம் என்று சொன்னார்கள், ஆனால் இரண்டரை வருடம் ஆட்சி கடந்தும் செவிலியர்களுக்கான பனி நிரந்தரம் குறித்து எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யவில்லை.இது குறித்து பல முறை அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கண்டுகொள்ளவிலை, அதனால தான் இங்கு போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.தொடர்ந்து பேசிய செவிலியர்கள் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்தனர். ஆனால், போராட்டத்திற்கு வரும் செவிலியர்களை போலீசார் கைது செய்து செல்கின்றனர். கோரிக்கையானது 7000க்கும் மேற்பட்ட செவிலியர்களை பனி நிரந்தம செய்யாமல் இருக்கின்றனர்.
நான்கு நோயாளிகளுக்கு ஒரு செவிலியர்கள் இருக்க வேண்டும், இது வரை எந்த ஒரு மருத்துவமனையிலும் இதனை பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.தமிழகத்தில் இருக்கும் அனைத்து செவிலியர்களும் எங்களுக்கு உறுதுணையாக வந்து கொண்டு தான் இருக்கின்றனர். கடந்த ஆட்சி முடிவின் போது திமுக நிச்சயம் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து தருகிறோம் என்ற வாக்குறுதியை கொடுத்தனர். ஆனால் இதுவரை எங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் எங்களின் கோரிக்கை நிறைவேற்றும் வரை போரட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.முன்னதாக கடந்த வாரம் மூன்று வித அமைப்பு ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தினர், அமைச்சர்கள் செவி சாய்க்காத நிலையில் கைது செய்யப்பட்டனர்.பின்னர் ஆசிரியர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்பினர்.
அந்த பிரச்னை முடிவதற்குள் அடுத்ததாக செவிலியர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது திமுக அரசின் ஆட்சி திறமையை காட்டுவதாக பலரும் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே போராட்டம் தான தீர்வு என்றும் சமூகத்தில் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர். மேலும், ஜனநாயக ரீதியில் நடக்க கூடிய போராட்டத்தை சந்திக்க திராணியற்று, பெற்ற தாய்க்கும் சமமாக நமக்கு மருத்துவ சேவை புரியும் செவிலியர்களின் போராட்டத்தை, சர்வாதிகார மனப்பான்மையுடன் குண்டு கட்டாக அவர்களை தூக்கி, கலைக்க முயற்ச்சிப்பது ஆட்சி ஆணவ அராஜகத்தின் உச்சக்கட்டம் என்று திமுக அரசை சமூக தளத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். எம்ஆர்பி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.