24 special

காங்கிரஸ் கட்சிக்கு கேசிஆர் கவிதா வைத்த ஆப்பு....!

raghulgandhi, kcr kavitha
raghulgandhi, kcr kavitha

தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் மகள் கவிதா முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பேசியது தான் தற்போது அரசியல்  வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது. மேலும் இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகிய ராகுல் காந்தி தெலுங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது கே சி ஆர்  ஆட்சியைப் பற்றி அவதூறாக பேசியதால் தற்போது அவருக்கு வினையாக திரும்பி உள்ளது. 


காரணம் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பேசும்போது கே.சி.ஆர் கட்சி கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தான் தழுவும் என்றும் இது பிரஜைகளுக்கும், பொது மக்களுக்கும் நடக்கின்ற போட்டி என்றும் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் கேசிஆர் பொது மக்களிடம் இருந்து விலகி தான் நின்று இருக்கிறார் இதனால் நாட்டில் பல ஊழல் நடந்தது மட்டுமல்லாமல் அதிகாரம் அனைத்தும் ஒரே குடும்பத்துடன் சேர்ந்துள்ளது என்று விமர்சித்து பேசி இருந்தார்.மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கே சி ஆரின் மகன் கே டி ஆர் நாங்கள் ராகுல் காந்தியை ஒரு தலைவராகவே நினைக்கவில்லை என்றும் அவர் உள்ளூர் தலைவர் எழுதிக் கொடுப்பதை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே அவர் தெரிவிக்கும் விமர்சனங்களை நாங்கள் கருத்தில் கொள்வதில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே சி ஆரின் மகள் கவிதா ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதாவது செய்தியாளர்களிடம் பதில் அளிக்கையில் ராகுல் காந்தி சிங்கமல்ல காகிதப் புலி என்றும் அவர் எழுதி வைத்துக் பேசி கொண்டிருக்கிறார் என்றும் அரசியலில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கூட அவருக்கு தெரியாது என்று கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது மட்டுமில்லாமல் தெலுங்கானா அரசு மக்களுக்கு இதுவரை  பல நன்மைகளை செய்திருக்கும் நிலையில் அவர் அரசியல் மரபுகள் மற்றும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தியை அடுத்த முறை தெலுங்கானா வந்தால் தோசை கடைக்கு போய் தோசை சாப்பிடாமல் மக்களிடம் கொஞ்சம் பேசினால் தான் தெலுங்கானா மக்களின் வலி புரியும் என்று ராகுல் காந்தியை தாக்கி பேசியது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும் கேசிஆர் கட்சி எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்து வருகிறது அதற்கு எடுத்துக்காட்டாக சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் கே சி ஆர் நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை ஆனால் எங்களுக்கும் சகோதரர்கள் இருக்கின்றனர் என்று கூறியிருந்தார் அதற்கு ஏற்றபடி கே சி ஆரின் மகள் கவிதா தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி நுழைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருப்பது அரசியலில் அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் பிற கட்சிகளையும் கேசிஆர் கவிதா தெலுங்கானா மாவட்டத்தில் நுழைய விட மாட்டார் என்று தெரிகிறது. அதாவது ''பாஜகவையாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் காங்கிரேஸை என்றுமே அண்ட விடக்கூடாது' என்று கவிதா கூறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மேலும் தெலுங்கானாவில் பாரத பிரதமர் மோடி ஆட்சி வந்தால் கூட பரவாயில்லை ராகுல் காந்தி ஆட்சி அமைக்க கூடாது என்று தெலுங்கானாவில் உள்ள அரசியல் சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாறி உள்ளது காங்கிரஸ் கட்சியிலுள்ள முக்கிய தலைவர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.