Cinema

லியோ படத்தின் வசூல் சாதனை...,,4 நாட்களில் இத்தனை கோடியா?

actor vijay, lokesh kanagaraj
actor vijay, lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வாரம் வியாழக்கிழமை திரைக்கு வந்த படம் லியோ. செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் அர்ஜுன், சஞ்சய்தத், உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகும் வரை ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் , ரசிகர்கள்  எதிர்பார்த்து இருந்தனர்.படம் வெளியான நாள் முதல் நாளிலிருந்தே ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் லியோ டிசாஸ்டர் ஹாஸ்டேக்கை வெறித்தனமாக 2 நாட்களாக டிரெண்ட் செய்து வந்தனர். இதனை கண்டு படத்தினை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் படத்திற்கான வசூல் குறைய ஆரம்பித்தது.


இதற்கிடையில் வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் லியோ படத்தை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்ற நிலையில், படத்தின் முதல் பாதி மட்டுமே எங்களுக்கு போதும் என்கிற விமர்சனத்தை முன் வைத்து படத்தை பார்த்து வருகின்றனர்.இரண்டாம் பாதியில் விஜய்யின் லியோ தாஸ் லுக் மற்றும் கடைசி 40 நிமிட ரோலர் கோஸ்டர் சண்டைக் காட்சிகள் என லியோ படம் போரடிக்காத படமாக மாறிய நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

முதல் இரண்டு நாட்களில் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும், தற்போது குடும்பங்கள் கொண்டும் படம் மாறிவிட்டதால் படம் வசூலை குவித்து வருகிறது. லியோ படம் வெளியாகி 3 நாட்களில் லியோ திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டிய நிலையில், 4வது நாளான நேற்று லியோ திரைப்படத்தின் வசூல் 400 கோடிக்கு அருகாமையில் சென்று இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லியோ படம் பார்ப்பதற்கு சலுப்பாக இருந்தாலும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திரைப்படம் வெளியானதால் குடும்பம் குடும்பமாக திரைக்கு செல்ல படையெடுத்துள்ளனர்.

உலகமெங்கும் வெளியான லியோ திரைப்படம் இதுவரை 390கோடி வசூல் ஈட்டியதாக இன்று  மற்றும் நாளை செவ்வாய் கிழமை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் லியோ படத்தின் வசூல் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ்ப்படமான ஜெயிலர் வசூலை முறியடிக்கும் என்றே தெரிகிறது. ரஜினியின் ஜெயிலர் படத்தை முறியடிக்க வேண்டும் என்றே ரசிகர்கள் ஆவலுடன்  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயின் பட வரிசையில் இது வரை வெளியான படங்களில் லியோ படம் அனைத்து படத்தின் வசூலையும் முறியடித்துள்ளது. ரசிகர்களிடம் மகிழிச்சியை உண்டாகியுள்ளது.  100 கோடி தாண்டியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ரசிகர்கள் இதனை எக்ஸ் தளத்தில் #LeoHits400crores  என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.