24 special

ஆந்திரா எம்பிக்கே அல்வா கொடுத்த மர்மநபர்..! திண்டாடும் போலீஸ் !


திருப்பதி : ஆந்திரமாநிலம் திருப்பதி மாவட்டம் கர்னூல் தொகுதி YSRC எம்பியாக இருப்பவர் டாக்டர்.சஞ்சீவ் குமார். இவரது வங்கிக்கணக்கில் இருந்து ஒருலட்சம் அளவில் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்க்குள்ளாகினார். அதைதொடர்ந்து காவல்துறையில் புகாரளித்துள்ளார்.


இதுகுறித்து கர்னூல் போலீசார் கூறுகையில் " எம்பி சஞ்சீவுக்கு முதலில் அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் அவரது பான் கார்டு விவரங்களை லிங்கில் பதிவுசெய்யுமாறும் அப்போது தான் அவரது வங்கிக்கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை நம்பி அந்த வலையில் விழுந்த எம்பி அந்த லிங்கை க்ளிக் செய்து தனது விவரங்களை பதிவிட்டுள்ளார். அடுத்த நிமிடங்களிலேயே ஆன்லைன் மோசடி நபர் ஒருவர் எம்பிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் ஒரு வங்கி அதிகாரி என கூறியுள்ளார். பின்னர் எம்பியின் செல்போனுக்கு வந்த ஒடிபி மற்றும் இதர விவரங்களை ஆன்லைன் மோசடி நபரிடம் கூறியுள்ளார்.

அடுத்த சிலநிமிடங்களிலேயே எம்பி சஞ்சீவின் வங்கிக்கணக்கில் இருந்த 97,699 ரூபாயை அந்த நபர் திருடியுள்ளார். அதன்பிறகே எம்பிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து எம்பி கர்னூல் காவல்நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் தீவிரவிசாரணையில் இறங்கியுள்ளனர்.மேலும் போலீசார் இதுபோன்ற லிங்குகளை ஓப்பன் செய்யவேண்டாம் என்றும் மோசடி அழைப்புகளில் இருந்து விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.