24 special

களமிறங்கப்போகும் மிஸ்ட்ரல் ஏவுகணை..?


இந்தியா : பாரிஸில் அமைந்துள்ள EUROSATORYயில் பாரத் டைனமிக் லிமிடெட் மற்றும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஏவுகணை உற்பத்தியாளரான MBDA இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் மிஸ்ட்ரல் ரக ஏவகணைகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளன. மிஸ்ட்ரல் ஏவுகணை என்பது ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தக்கூடிய ஏர் டு ஏர் ரக ஏவுகணை (ATAM) அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது.


இந்த மிஸ்ட்ரல் இரண்டு லாஞ்சர்களை கொண்டதாகும். ஹெலிகாப்டரின் காம்பாட் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படக்கூடிய இரண்டு மிசைல்களை ஒவ்வொரு பேரிங்கிலும் கொண்டிருக்கும். இந்த ஏவுகணையின் வேகம் 200 நாட் ஆகும். அதேநேரத்தில் 15000 அடிக்கும் மேல் பறக்கக்கூடியது.

இந்த மிஸ்ட்ரல் ஏவுகணைகளை HAL தயாரிப்பான ருத்ரா ஹெலிகாப்டர் மற்றும் இலகுரக போர்ஹேலிகாப்டர் இரண்டிலும் பரிட்சார்த்த முறையில் சோதனை செய்து பார்த்துள்ளது இந்திய விமானப்படை. இதன் இலக்கு தூரம் 6.5 கிலோமீட்டர் என கருதப்படுகிறது. 

இந்த வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதுவரை வெளிநாடுகளில் இருந்தே நமது ராணுவம் இந்த வகை ஏவுகணைகளை வாங்கியுள்ளது. முதல்முறையாக இந்தியாவிலேயே மிஸ்ட்ரல் தயாரிக்கப்பட இருப்பது ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமைகொள்ள செய்திருக்கிறது.

பாரத் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய நிறுவனத்திற்கிடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி 2022-23 ஆண்டில் இந்தியாவில் மிஸ்ட்ரல் ஏவுகணை உற்பத்தி தொடங்கும் என கூறப்படுகிறது.