24 special

திமுக அரசுக்கு நெருங்கிய கிளைமாக்ஸ்...!டெல்லி செல்லும் ஆளுநர்..!

R n ravi,mk stalin
R n ravi,mk stalin

தற்போது இல்லாத அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள தடை விதித்திருந்தது. சமீபத்தில் அந்த தடையை நீக்கிய பிறகு அமலாக்கத்துறை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தமிழக தலைமைச் செயலகத்தில் அவரது அரையிலும் சோதனையில் ஈடுபட்டது இதில் பல வெளிவராத உண்மைகள் மற்றும் ஆவணங்கள் வெளிவந்துள்ளதால் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த சமயம் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்த பிறகு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியின்  இந்த நிலைமைக்கு பாஜக'வே காரணம் அமலாக்க துறையை தங்கள் கையில் போட்டுக்கொண்டு இந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று தமிழக முதல்வர் நேரடியாக கண்டனங்களை தெரிவித்தார் ஆனால் அதனை முறியடிக்கும் விதமாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிரான வாதங்களை வைத்து அவர் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி வாங்கியது. 

காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று மாதங்கள் நீண்ட ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் இந்த மூன்று மாத காலத்திற்குள் அமலாக்கத்துரை செந்தில் பாலாஜியிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளும் பல வேலைபாடுகளில் அறிவாலய தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வரும் வாரங்களில் டெல்லி செல்ல உள்ளதாகவும் மற்றொரு பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இருப்பதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் தமிழக ஆளுநர் டெல்லி செல்ல உள்ளார் இது திமுக அரசிற்கு டிஸ்மிஸ் கொடுக்கும் செய்தியாகவே அமையும் என்று கூறியுள்ளார்.  ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்திருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை இரண்டையும் வெவ்வேறு இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்குமாறு ஆளுநரிடம் கடிதம் அனுப்பினார் ஆனால் ஆளுநர் அதில் முறையான விவரங்கள் இல்லை என்று அதை திருப்பி அனுப்ப இரண்டாவது முறையாக அனுப்பிய கடிதத்திலும் இலாகா இல்லாத அமைச்சராக அவரை தொடர் அனுமதிக்க இயலாது என்ற தன் கருத்தை ஆளுநர் கூற அதற்கு பல்வேறு எதிர்ப்புகளையும் திமுக தரப்பு முன்வைத்து வருகின்றனர். 

இப்படி பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் இருந்து வரும் சமயத்தில் ஆளுநர் திடீரென வரும் வாரங்களில் டெல்லி செல்ல உள்ளார் என்ற தகவல் திமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஆளுநர் ஆர் என் ரவியிடம் பாஜக, புதிய தமிழகம் கட்சி மற்றும் அதிமுக கட்சியினர் ஆளும் அரசிற்கு எதிராக புகார் அளித்துள்ள நிலையில் ஆளுநர் டெல்லி செல்லும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு தற்போது இருந்து வரும் சூழலில் ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு வழி இருப்பதாகவும் இந்த நிலையில் ஆளுநர் டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.