24 special

திமுகவில் தொடர்ச்சியாக நடைபெறும் சிக்கல்கள்...!ஆளுநர் வைத்த ஆப்பு...!

R n ravi,mk stalin
R n ravi,mk stalin

தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் பல ஆளும் திமுக அரசிற்கு எதிராக இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி மூத்த அமைச்சர்கள் பலர் தற்போது சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள், தொடர்ச்சியாக ஒவ்வொரு நிகழ்வுகள் குறித்தும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனையும் பெற்று வருகிறார்கள்.


அந்த வகையில் சட்ட வல்லுநர்கள் பலர் ஆளுநர் விஷயத்தில் முதல்வராக உங்களது கருத்தை சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யுங்கள், மேலும் உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடம் இதேயே வழியுறுத்துங்கள் என தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் தான் வைகோ நேரடியாக முதல்வர் ஸ்டாலினிடம் வந்து ஆளுநருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறேன் ஆளுநர் ரவியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் கையெழுத்து போடுங்கள் என கேட்டு இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, முதல் கையெழுத்திட்டு இருக்கிறார் இரண்டாவதாக, நான் கையெழுத்து போட்டு இருக்கிறேன், மூன்றாவது நபராக, முதல்வர் உங்களிடம் கையெழுத்து வாங்குவதற்காகா வந்து இருப்பதாகவும், அந்தப் படிவத்தில் கையெழுத்திடுமாறு, முதல்வரிடம் வைகோ கூறினார்; ஆனால், அவர் மறுத்து விட்டார். முதல்வராக இருப்பதால், சட்டச் சிக்கல் எழும் என்பதால், கையெழுத்திடுவதை அவர் தவிர்த்து இருக்கிறார்.

இதனால் வெறிச்சோடிய முகத்துடன் ஸ்டாலினனை சந்தித்த வைகோ திரும்பி இருக்கிறார்..., இந்த சூழலில் தொடர்ச்சியாக ஆளுநருடன் மோதல் போக்கை கடை பிடிப்பது சரியல்ல எனவும் முதல்வருக்கு அறிவுரை வந்து இருக்கிறது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதை ஆளுநர் ஏற்காமல் திருப்பி அனுப்பினார், ஆனால் முதல்வர் ஸ்டாலின் விடா பிடியாக இருந்த காரணத்தினால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர்வதை உறுதி செய்தது.

இந்த விஷயத்தில் ஆளுநர் கூறியது சரி என்றும், நாட்டின் பல மாநிலங்களில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக தொடர்ந்து இருக்கிறார்கள் அதற்கு அவர்களின் உடல் நிலை காரணமாக இருந்து இருக்கிறது, முரசொலி மாறன் வாஜ்பாய் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் அதற்கு அவரின் உடல் நிலையே காரணம்.

ஆனால் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட நிலையில் முதலில் முதல்வர் ஸ்டாலின்செந்தில் பாலாஜியை அமைச்சர்வையில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் இதனை ஆளுநர் சுட்டி காட்டிய நிலையில், அதையும் மீறி ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இது உடனடி தீர்வாக இருந்தாலும் இதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் இதனால் என்ன செய்வது என்ற அதிர்ச்சியில் ஸ்டாலின் இருக்கையில் தான் வைகோ ஆளுநருக்கு எதிராக அவரை நீக்க வேண்டும் கையெழுத்து போடுங்கள் என வந்து இருக்கிறார்.

இதை பார்த்து அதிர்ந்த முதல்வர் ஸ்டாலின் அருகில் இருந்த துரை முருகன் மூலம் கள நிலவரம் என்ன என்பதை விளக்கி கூறி தெரியப்படுத்தி இருக்கிறார்,தற்போது சட்ட ரீதியாக செந்தில் பாலாஜி விஷயம் மற்றும் ஆளுநர் கடிதம் போன்றவற்றிற்கு எவ்வாறு பதில் கொடுப்பது என தீவிரமாக கோட்டையில் ஆலோசனை நடைபெற்று வருகிறதாம்.

ஆளுநர் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என சொல்லி வந்த கட்சிக்கு ஆளுநர் பதவி என்பது என்ன அதன் அதிகாரம் என்ன என்பதை நாளுக்கு நாள் உணர்த்தி வருகிறார் ஆளுநர் ரவி என்கின்றனர் அரசியல் ஆழம் தெரிந்தவர்கள்.