24 special

மாட்டியது அமைச்சர் மட்டும் இல்லையாமே..! சி.எம் குடும்பத்தில் அமலாக்கத்துறை வசம் சிக்கப்போகும் முக்கிய தலை...!

senthil balaji, mk stalin
senthil balaji, mk stalin

கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் சோதனை நடத்தியது மேலும் அந்த மணல் குவாரிகளில் அரசு ஒப்பந்ததாரராக இருப்பவர்கள், மணல் குவாரிகளின் உரிமையாளர்கள் என கிட்டத்தட்ட 34 பகுதிகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அமலாக்கத்துறை பல குழுக்களாக பிரிந்து சி ஆர் பி எப் அதிகாரிகளின் பாதுகாப்பில் சோதனையில் ஈடுபட்டது. மேலும் தரப்பிலிருந்து சமீபகாலமாக மணல் கடத்தல் குறித்த புகார்கள் தமிழகத்தில் அதிகமாக எழுந்ததை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மணல் குவாரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் மணல் குவாரிகளுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களையும் தாண்டி கனிமவளத்துறை அதிகாரிகளாக உள்ளவர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அது மட்டுமல்லாமல் விசாரணை செய்வதற்காக இரண்டு கனிம வளத்துறை அதிகாரிகளையும் அமலாக்கத்துறை கைது செய்தது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதன் தீவிரத்தை புலப்படுத்தியது. மேலும் தொழிலதிபர்களாக கருதக்கூடியவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது அதில் புதுக்கோட்டையை சேர்ந்த ரத்தினம் என்பவரது வீட்டில் கிட்டத்தட்ட 36 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இறுதியில் அமலாக்கத்துறை மூட்டை மூட்டையாக மணல் குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்த ரசீது சீட்டுகளை எடுத்துச் சென்றனர். இந்த ரெய்டு தொடங்கப்பட்டதிலிருந்தே மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளும் இந்த சோதனை அமைச்சர் துரைமுருகனுக்காக தான் அவர் செய்திருக்கும் மோசடி பற்றிய ஆதாரங்களை திரட்டுவதற்கு இந்த சோதனை என்றும் அரசியல் வட்டாரங்களில் வலம் வந்த கருத்துக்களும் ஏராளம்! 

இந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு அமலாக்க துறையின் மணல் குவாரிகள் சம்பந்தப்பட்ட சோதனை முடிவு பெற்றது. அதோடு சோதனையின் முடிவில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்க துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் அகழ்வு மையங்கள், எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் அமலாக்கத்துறை 1ம் தேதி அன்று சோதனை நடத்தியது மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள், அரசு சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் தமிழகம். சோதனையில், பல்வேறு குற்ற ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் கிடைத்தது. முடக்கி வைக்கப்பட்டு, கணக்கில் வராத ₹ 2.33 கோடி பணம், ₹56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அமலாக்கத்துறை தரப்பில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இப்படி அமலாக்க துறையின் அறிவிப்பில் ஆடிட்டர் பி. சண்முகராஜ் என்பவர் தமிழக முதல்வரின் மருமகன் சபரீசன் மற்றும் சில முக்கிய திமுக அமைச்சர்களுக்கு ஆடிட்டராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து கைது செய்தவர்களை விசாரித்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதன் மூலமே நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனை அனேகமாக இனி வரும் வாரத்தில் விசாரிக்க அவரை அழைக்கலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி துரைமுருகனை அமலாக்க துறை அழைக்கும் பட்சத்தில், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அறிவாலயத்தில் வைத்தே விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை தயாராகி வருவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது. முதல்வர் மருமகனுக்கும் சேர்த்தே அமலாக்கத்துறை இந்த ஸ்கெட்ச் எனவும் கூறப்படுகிறது...