24 special

விநாயகர் சதுர்த்தி ஸ்பெசல் ஆப்பு... பண்டிகையை வைத்தே பாஜக போட்ட ஸ்கெட்ச்..!

annamalai
annamalai

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் விநாயகர் சிலைகளை தயாரிப்பதில் அதை தயாரிப்பவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சிலையை தயாரிப்பதில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது விதவிதமான உருவங்களை வைத்த விநாயகர் சிலையை உருவாக்கிய நிலையில் வீடு  பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டவுடன் அதை நீரில் கரைக்கும் பணிகளை மேற்கொள்வது வழக்கம், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வந்தது மேலும் இந்த விநாயகர் சிலைகளை தயாரிப்பதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் சீல் வைக்கப்பட்டதாக கூறி குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்காட் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் விநாயகர் சிலை தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்த போது அங்கிருந்த 400க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு சீல் வைத்ததாக தகவல்கள் வெளிவந்தன மேலும் விநாயகர் சிலை தயாரிக்கும் கலவையில் கெமிக்கல் கலவை சேர்க்கப்பட்டதால் சிலை கூடத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று சீல் வைக்கப்பட்டதாக தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி நெருங்கிய நிலையில் இவ்வாறு சிலைகளுக்கு சீல் வைத்தது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,மேலும் இந்த விநாயகர் சிலையை தயாரிப்பவர்கள் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி விநாயகர் சிலை தயாரித்த நிலையில் சிலைக்கு சீல் வைத்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அதிகாரிகளிடம் கெஞ்சி கேட்ட வீடியோ இணையதளத்தில் மற்றும் செய்தி தொலைக்காட்சியில் வெளியாகிய நிலையில் அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது, இதற்கான ஆர்டர்கள் வெளியில் இருந்து தரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் விநாயகர் சிலை ஆர்டர் கொடுத்தவர்கள் மற்றும் அருகில் உள்ள இந்துக்கள் அனைவரும் விநாயகர் சிலைக்கு சீல் வைத்ததற்கு எதிராக குரல் எழுப்பினர் மேலும் அனைவரும் ஒன்றிணைந்து  அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை செய்யும் இடங்களுக்கு சென்று அரசு அதிகாரிகள் ரெய்டு நடத்துவது மற்றும் சிலைகளை கைப்பற்றுவது சீல் வைப்பது முதலிய சம்பவங்களை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவத்திற்கு எதிராக இந்து சமயத்தினர் மட்டுமல்ல  பல  தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றது. திமுக அரசுக்கு இது கண்டிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன பாஜக இந்த விவகாரத்தை முழுமையாக கையில் எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 

இதனால் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக சார்பில் ஊர்வலங்கள் மற்றும் விநாயகர் வழிபாடுகள் நடத்த இருப்பதாக பாஜக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் முக்கிய நிர்வாகி அமர்ப்பிரசாத் ரெட்டி இது குறித்து கூறுகையில், நாங்கள் பாஜக சார்பில் 166000 சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம், கண்டிப்பாக இந்தமுறை பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட போகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.திமுக அரசு ஏற்கனவே சனாதனத்தை பற்றி சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் சனாதனத்தை பற்றியும் விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவத்தை பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது. மேலும் இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட விவகாரங்கள் வேறு திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என வேறு தெரிகிறது...