24 special

கைவிட்ட திமுக....கடுப்பில் அமீர் செய்யப் போகும் காரியம்...

mkstalin , ameer
mkstalin , ameer

தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்து ஆரம்பத்தில் ஒரு தொழிலதிபராக தன்னை வெளிக்காட்டி பிறகு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி  மௌனம் பேசியதே என்று நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படத்தை இயக்கினார். பிறகு ஜீவாவின் நடிப்பில் மர்ம திரில்லர் படமான ராம் என்ற திரைப்படத்தையும் இயக்கினார் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை விமர்சகர்களிடம் கண்டது. அதற்குப் பிறகு கார்த்திக்கின் முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கண்டார். இதற்குப் பிறகு வடசென்னை படத்தில் சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் விருதை பெற்றார். மேலும் தற்பொழுது உயிர் தமிழுக்கு என்ற அரசியல் நாடகத்தில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். 


சினிமா துறையில் ஒரு முன்னணி இயக்குனராக உள்ள அமீர் அரசியல் வட்டாரத்திலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார் இவர் கட்சிக்காரராக இல்லை என்றாலும் அந்த கட்சிக்காக பல மேடைகளிலும் பிரச்சாரங்களையும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது படத்தின் மூலமும் பல இடங்களிலும் மறைமுகமாக திமுகவை ஆதரித்து பேசி வந்துள்ளார். அதோடு அமீருக்கும் தமிழ் சினிமாவில் அதிக ஆதிக்கம் பெற்றுள்ள உதயநிதிக்குமே நெருக்கம் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அமீர் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்துமே அமீருக்கு பெரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பொருள் கடத்தல் மன்னராக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் அமீருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அமீரும் ஜாபர் சாதிக்கும் பல தொழில்களை தனியாக தொடங்கியுள்ளனர் என்றும் பெரும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் அமீர் மீது சுமத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் திமுகவில் ஒரு முக்கிய அதிகாரி அதோடு தலைமையிடம் அதிக நெருக்கம் காட்டியவர் இவரை போன்று தான் அமீரும் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலுமே திமுகவுடன் உறவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் ஜாபர் சாதிக் விவகாரம் பெருமளவில் வெடித்த பொழுது அமீருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் பெரும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது அப்பொழுது அமீர் இதுவரை ஒரு கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். ஆனால் அந்த கட்சியினரை இவருக்கும் ஜாஃபர் சாதிக்கும் தொடர்பு இருப்பதாக பேசி வந்துள்ளனர் இதனால் கடுப்படைந்த அமீர் அந்த கட்சியின் முக்கிய நிகழ்வுகளிலும் தற்போது கலந்து கொள்வதில்லை, இதனை இவரே வெளிப்படையாக கூறும் ஆடியோ கூட சமீபத்தில் வெளியானது. அதுமட்டுமின்றி ஜாஃபரின் மனைவி அக்கவுண்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் அமீருக்கு சென்றதாகவும் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் செய்திகள் வெளியான பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார் அமீர்.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பிய பொழுது அதற்கு பல பதில்களையும் கொடுத்துள்ளார் அந்த பதில்கள் அனைத்துமே தற்போது அரசியல் வட்டாரம் முழுவதும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது விஜய் சீமானுடன் இணைந்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்வி பத்திரிகையாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட பொழுது விஜய் உடன் இணைந்து அரசியல் செய்ய தயாராக இருப்பதாக சீமான் கூறியிருக்கிறார். விஜய் மற்றும் சீமானுடன் அரசியல் பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கிறேன். 

விஜய் ஒரு முறை என்னை அழைத்தால் போதும் அவருடைய கட்சிக்காக நான் செயல்பட தயாராக இருக்கிறேன் என்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்ற தனது பச்சைக் கொடியை காண்பித்துள்ளார். அமீர் எப்படி திடீரென திமுகவிற்கு எதிராக உள்ள விஜயுடன் சேர முன் வந்தார் என்று பார்க்கப்பட்ட பொழுது ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுக முற்றிலும் அமீரை கண்டு கொள்ளாமல் கைகழுவி விட்டது, அதனால் பொறுத்து பொறுத்து போன அமீர் தற்பொழுது பொங்கி எழுந்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.