கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக கடந்த வருடத்தில் நடந்ததை போன்று கள்ளச்சாராயம் அருந்தி இந்த முறை ஐம்பதற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுவும் இந்த விவகாரத்தில் திமுக அரசியல் தலையீடு திமுக அரசின் அதிகாரமும் இருந்ததாக கூறப்படுகிறது இவற்றிற்கு திமுக தரப்பில் எந்த ஒரு விளக்கமும் பதிலும் அழைக்கப்படவில்லை அதற்கு மாறாக கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை திமுக அரசு தூக்கி கொடுத்தது அது மட்டும் இன்றி தேர்தலுக்கு முன்பாக மதுவால் பல விதவைகள் தமிழகத்தில் உள்ளனர் என்று மிகவும் கொந்தளித்து வேதனையில் பேசிய திமுக பெண் நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் தலையை காட்டவே இல்லை பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டினால் கூட எகிறி குதித்து ஓடினார்கள்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்! இதற்கு முன்பாகவே காங்கிரஸ் நிர்வாகி பல மாதங்களாக மிரட்டலை அனுபவித்து வந்ததோடு, அதற்காக காவல்துறையிடமும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் ஒன்றை எழுதிக் கொடுத்த சில நாட்களிலேயே மிகவும் கொடூரமான முறையில் அவரது தோட்டத்திலேயே கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இப்படி தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் வெட்டுக்கொலைகள் அதுவும் அரசியல் பிரமுகர்களுக்கே பாதுகாப்பு இல்லாதபடியான வெட்டுக் கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தது. இதற்கு பின்னால் இருப்பவர்களின் பின்புலமும் தெரிய வரவில்லை ஒரு கொலை நடக்கப்போகிறது என்றால் அது குறித்த தகவல்கள் மற்றும் பின்னணிகள் அல்லது திட்டமாவது அப்பகுதியில் உள்ள காவல் துறைக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும் அப்படி இருக்கும் பொழுது எப்படி இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது ஆகவே காவல்துறையை தன் கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் இதன் மூலம் என்ன கூற வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ஒரே நாளில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடலூர் அதிமுக வார்டு செயலாளர், கன்னியாகுமாரியில் காங்கிரஸ் கவுன்சிலர் கணவர் மற்றும் சிவகங்கையில் பாஜக நிர்வாகி என தொடர்ந்து கொலை சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருப்பது தமிழக மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது. அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத்தனத்தைத் தொடரும் ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும் என்று எனது கண்டனத்தை முன் வைத்துள்ளார். ஏற்கனவே நடந்த படுகொலைகளுக்கு இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை அதற்குள் தொடர்ச்சியாக மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அதுவும் அரசியல் பின்னணி கொண்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தை தீயாக எரிய வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து அண்ணாமலை தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளாராம், அதாவது ஆளுங்கட்சியின் செயல்பாடுகள், இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போன்றவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லுங்கள், குறிப்பாக திமுக ஆட்சியில் நடக்கும் இந்த அவலங்கள் மக்களுக்கு முதல்வரின் கையாலாகாதனத்தால் நடைபெறுகிறது என எடுத்துச்செல்லுங்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளாராம்... இனி வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் பாஜக தீவிர போராட்டத்தில் இறங்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது...