பாஜக மாநில பட்டியல் சமுதாய அணி தலைவர் தடா பெரியசாமி தமிழக முதல்வர் ஸ்டாலினின் பேச்சு ஒன்றை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அது பின்வருமாறு :பட்டியல்சமூகத்தைஏமாற்றுவதுதான்திராவிட_மாடலா?
சென்னை திக அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.ராஜு அவர்கள் எழுதிய "தலித் உண்மை" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் "6-வது முறையாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக அரசு பட்டியலின பழங்குடி மக்களின் உரிமைகளை காப்பாற்றக் கூடிய திராவிட மாடல் அரசு" என்றும்,
1971 -ல் 16% இருந்த இட ஒதுக்கீட்டை 18% உயர்த்தியது கருணாநிதி தலைமையிலான அரசுதான் என்று கூறி பட்டியலின மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு உள்ளதென காட்டிக் கொள்ள விரும்புகிறார். பட்டியல் சமூகத்திற்கான இடஒதுக்கீடு என்பது புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் பெறப்பட்ட உரிமை. யாரும் பிச்சை போட வேண்டிய அவசியமில்லை.
1971 இல் இருந்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே 18% வழங்கப்பட்டது. தற்போது பட்டியல் சமூகம் 24% கும் மேல் உள்ளனர். தற்போதைய திமுக அரசு பட்டியல் சமூகத்திற்கு 24% இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்க முன்வருமா? மேலும் இதுவரை வேலைவாய்ப்புகளில் 6% கூட நிரப்பப்படவில்லை என்பது பட்டியல் சமூக தலைவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் கிருஷ்ணசாமி அவர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக வெள்ளை அறிக்கையை கேட்டார்இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழக முதல்வர் அவர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?
பட்டியல் சமூக மேம்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு உட்கூறு திட்டத்தின்படி, ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்திற்கு அன்றைய திமுக அரசு 1997-98 ல் ரூ-594.53 கோடியும், 1998-99 ல் ரூ-509.70 கோடியும், 1999-2000 ல் ரூ- 169.07 கோடியும் செலவிடாமல் திருப்பி அனுப்பி பட்டியல் சமூகத்தினை வஞ்சித்தீர்களே இதுதான் திராவிட மாடலா?
2001இல் 145 இடங்களில் சமத்துவபுரம் கட்ட திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் 14,500 வீடுகள் கட்ட 75 கோடி முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 40% வீடுகள் மட்டுமே பட்டியல் சமூகத்திற்கும், 60% வீடுகள் இதர சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால் மொத்த நீதியும் ஆதிதிராவிட நலத்துறையின் நிதியிலிருந்து செலவிடப்பட்டதே! இதுதான் திராவிட மாடலா?
16.9.2006 அன்று திமுக ஆட்சியில் இலவச டிவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. டிவி அனைத்து சமூக மக்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் டிவி கான ஒட்டுமொத்த நீதியும் ஆதிதிராவிட நிதியிலிருந்து செலவிடப்பட்டதை பட்டியல் சமூக ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த என்.எம்.காம்ளே அவர்கள் 2010 பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அப்போதைய திமுக அரசு பட்டியல் சமூகத்தில் நிதியை எடுத்து தங்கள் மனம் போன போக்கில் தவறாக செலவிட்டு விட்டனர்,
இலவச டிவி வழங்கியுள்ளனர் என பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தாரே இப்படிப்பட்ட துரோகம் செய்ததுதான் திராவிட மாடலா? 2011 இல் பட்டியல் சமூகத்திற்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் பற்றிய ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.மருதமுத்து அவர்கள் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டதே அது என்னாயிற்று? சென்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் பஞ்சமி நிலங்கள் சம்பந்தமாக #சிறப்புச்_சட்டம் இயற்றிட கேட்டுக் கொண்டாரே அப்போது வருவாய் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாரே!
நடவடிக்கை என்னாயிற்று?. திமுக அரசு ஆட்சியில் உள்ள போதெல்லாம் பட்டியல் சமூகம் வஞ்சிக்கப்பட்டது தான் வரலாறு. ஆனால் பேசுவதெல்லாம் #சமூகநீதி ஆனால் செய்வதெல்லாம் #சமூகஅநீதி. பட்டியல் சமூக மக்களே இனி திமுகவின் துரோகத்தை அனுமதியோம். திராவிட மாடலுக்கு முடிவு கட்டுவோம்.பட்டியல் சமூகமே! திராவிடத்தால் வீழ்ந்தோம்- பாரத தேசியத்தால் எழுவோம் என குறிப்பிட்டுள்ளார் தடா பெரியசாமி .