
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பிரசார மேலாண்மை பொது செயலாளரும், நடிகர் விஜயின் நெருங்கியவருமான ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக அவர் விளையாட்டு போட்டியில் பங்கேற்கிறார் எனத் தகவல் வெளியானாலும், உண்மையில் அவர் அரசியல் தலைவர்களை சந்திக்கச் சென்றிருப்பது தான் முக்கிய நோக்கம் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
கரூரில் 41 உயிரிழப்புகள் நடந்த நிகழ்வுக்குப் பின் பிஜேபி எம்பிக்கள் நேரடியாக விசாரணைக்காக தமிழகத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து தவெக மீண்டும் “ஆக்டிவ் மோட்”க்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான முதல் சான்று தான் ஆதவ் அர்ஜூனாவின் டெல்லி பயணம் எனக் கருதப்படுகிறது.ஆனால் அவர் பாஜகவை சந்திக்கிறாரா இல்லை காங்கிரசை சந்திக்கிறாரா என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் விஜயை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியவர் ராகுல் காந்தி என்பது குறிப்படத்தக்கது.
இது ஒருபுறம் இருந்தால் தமிழகத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, சிறந்த பாஸ்கெட்பால் வீரராக மட்டுமன்றி, அரசியல் வியூக நிபுணராகவும் அறியப்படுகிறார்.2016ம் ஆண்டு திமுகவின் "நமக்கு நாமே" பிரச்சாரத்திலிருந்தே அவர் பங்கு கொண்டு வந்துள்ளார். பின்பு 2021 தேர்தலில் “விடியல் தான் வராரு” என்ற பிரசாரத்தை வகுத்தவர். “ஒன் மைண்ட் இந்தியா”, “வாய்ஸ் ஆஃப் காமன்” போன்ற அரசியல் டேட்டா நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
ஆதவ் அர்ஜூனா, லாட்டரி கிங் மார்ட்டினின் மருமகன். மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் ஏற்கனவே 2015ல் ராம் மாதவ் வழியாக பிஜேபியில் இணைந்துள்ளார். தற்போது 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.இந்த குடும்பத் தொடர்பும், பிஜேபி-ஆர்எஸ்எஸ் தலைவரான ராம் மாதவுடனான நெருக்கமும், விஜய் கட்சிக்கு பிஜேபியின் ஆதரவை உறுதி செய்யும் காரணமாகக் காணப்படுகிறது.
இதுவரை பிஜேபி, ஆர்எஸ்எஸுக்கு எதிரியாக தன்னை காட்டிக்கொண்ட விஜய், தற்போது பிஜேபியுடன் நெருங்க ஆரம்பித்துவிட்டார். என அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது. 2026 தேர்தலில் திமுகக்கு எதிராக நேரடி மோதல் உருவாகும். அதிமுக-பிஜேபி-விஜய் கூட்டணி ஒன்று சேர்ந்தால், திமுகவுக்கு டெபாசிட் வாங்குவது கஷ்டம் ஆகும். இளைஞர்களை
2016ல் கருணாநிதி கூறிய “பழம் நழுவி பாலில் விழக்கூடாது” என்ற உவமை அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இம்முறை, விஜயின் தவெக பிஜேபி கூட்டணியில் இணைந்தால், அது பிஜேபிக்கு அப்படியே பழம் பாலில் விழும் நிலையாக மாறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்நிலையில் சமீபத்தில் கரூர் சம்பவம் விஜய்யை மிக பெரிய அளவில் பாதித்து விட்டது என்றும், குறிப்பாக திமுகவை தனி ஒருவனாக எதிர்க்க முடியாது, குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக துணை நமக்கு வேண்டும் என்பதை உணர்ந்த விஜய், தற்பொழுது பாஜக - அதிமுக உடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்க தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் கிடைக்கப்பெற்ற வீடியோக்களுடன் டெல்லி விரைந்துள்ளது தவெக டீம் இது திமுக தரப்பில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விரைவில் டெல்லி செல்ல இருக்கும் விஜய், தமிழக நலன் குறித்து மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஊதுகுழல் என்ற சந்தேகம் தவெக வினரிடையே எழுந்துள்ளது.