24 special

ஆப்லைனில் ஆளுநர் செய்த அதிரடி சம்பவம்..! அதிரடியாக கைது செய்த போலீஸ் NIA விசாரணை !

RN Ravi
RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உளவு அமைப்பில் பணியாற்றியவர், நாகலாந்து போன்ற தீவிரவாத கும்பல் நிறைந்த மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றிய ரவியை தமிழக ஆளுநராக நியமனம் செய்யும் போதே இந்த நியமனம் முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டும் இல்லாமல் முழுக்க முழுக்க பாதுகாப்பு சமம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்பட்டது.


அத்துடன் சென்னையில் தேசிய பாதுகாப்பு முகமை NIA அமைப்பின் கிளை அலுவலகம் தொடங்கப்பட்டதும், பல்வேறு விஷயங்களை தெளிவு படுத்தின, இந்த சூழலில் தமிழக ஆளுநர் மாதம் மாதம் உள்துறை அமைச்சகத்திற்கு தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சார்ந்தந்தக் விஷயங்களுடன், எல்லை மாநிலமான தமிழகத்தில் சில அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் செயபாடுகள் குறித்த தகவலை அளித்து வந்து இருக்கிறார்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஒரு குழு ஈடுபட்டு வருவதாக உளவு அமைப்புகளுக்கு தகவல் கிடைக்க அதனை ஆளுநர் மற்றும் மாநில உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது இதன் அடிப்படையில் நேர்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அதிரடி திருப்பம் உண்டானது.

மயிலாடுதுறையில், மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள், கறுப்பு நிற 'ஸ்கார்பியோ' காரில் தப்பிச் செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த காரை, கடந்த பிப்ரவரி 21 ம் தேதி காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே போலீசார் சுற்றி வளைத்து மடக்கினர்.

இதில், அதே மாவட்டம், நீடூரைச் சேர்ந்த சாதிக் பாஷா, 38, ஜஹபர் அலி, 58, கோவை முகமது ஆஷிக், 29, காரைக்கால் முகமது இர்பான், 22, சென்னை அயனாவரம் ரஹ்மத், 29, ஆகியோர் இருப்பது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, சாதிக் பாஷா என்பவர் போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

ஆனால் இதெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்த போலீசார் முன் எச்சரிக்கையுடன் இருந்ததால்  ஐவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளது  சாதிக் பாஷா மற்றும் இவரது கூட்டாளிகள், 'காலிபா பார்ட்டி ஆப் இந்தியா, காலிபா பிரன்ட் ஆப் இந்தியா' உள்ளிட்ட அமைப்புகளை நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதன் பின்னணியில், தமிழகம் மற்றும் கேரளாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு ஒன்று இருப்பதை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது குறித்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து, சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், இந்த அமைப்புக்கு பணம் எங்கிருந்து வருகிறது; அதன் பின்னணியில் உள்ள ஒட்டு மொத்த கும்பல் எது என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தகவல் திரட்டி உள்ளனர்.

அதன் பின்னணி என முழுமையான தகவல் பெறப்பட்டு தற்போது முழு குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் சென்னை, கொழும்பு கேரளா என மூன்று முக்கிய நகரங்களில்  இந்த அமைப்பு சதி செயலில் ஈடுபட திட்டம் வகுத்ததும் கண்டறியப்பட்ட காரணத்தால், இலங்கையின் எல்லையை தீவிரமாக கண்காணிக்க பாதுகாப்பு துறைக்கு அதிரடி உத்தரவு பறந்து இருக்கிறதாம்.

இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆளுநர் ரவி உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்து இருப்பதுடன், மற்றொரு முக்கிய விவகாரம் குறித்தும் குறிப்பாக தென் மாவட்டமான இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெறும் ஊர் மதமாற்றம் குறித்தும் அறிக்கை கொடுத்துள்ளார் இது குறித்து முழுமையான தகவல்களை அடுத்த பதிவில் வெளியிடுகிறோம் மறக்காமல் TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை FOLLOW செய்து கொள்ளவும்.