தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன, நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாமக மாநில துணை தலைவர், பண்ரொட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி, தமிழ் சினிமா நடிகர்கள் இன்னும் மூன்று பிரபல அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள் என ஒரு புது குழுவே பாஜகவில் இணைந்தது.
இதில் வட தமிழகத்தை சேர்ந்த மக்கள் பாஜகவில் தங்களை இணைத்து வருவது பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது, வழக்கமாக திமுக அல்லது அதிமுகவில் இணையும் காலம் மாறி இப்போது புதிதாக பாஜகவில் பெரும்பாலான அரசியல் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைந்த நிலையில் இப்போது திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி தன்னை பாதுகாத்து கொள்ள பாஜகவில் இணைவதாக தெரிவித்துள்ளார் தன் கணவனிடம் இருந்து தன்னை காப்பாற்றும் ஒரே இயக்கம் பாஜக தான் என நான் நம்புவதால் நான் பாஜகவில் தொண்டராக இணைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வேல்முருகனால் எனக்கு, வெளியில் சொல்ல முடியாத துன்பங்கள் ஏற்பட்டன.அவரிடம் இருந்து விடுதலைக்கு வழி தேடிக் கொண்டிருந்தேன். கடந்த 2018ல் விவகாரத்து செய்து கொள்ளலாம் என, வலியுறுத்தினார். விவகாரத்துக்கு சட்டப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அவரிடம் இருந்து பிரிந்து வெளியே வந்து விட்டேன்.தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன்.
அவர் என்னை பழிவாங்கும் எண்ணத்தில், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்.வேல்முருகன் தி.மு.க., கூட்டணியில் செல்வாக்கோடு, எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை.என்னை காப்பாற்றிக் கொள்ள, எனக்கு தெரிந்த பா.ஜ.க,வினர் வாயிலாக அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.,வில் இணைந்து விட்டேன். இனி என்னை அவர்கள் காப்பாற்றுவர் என தனியார் நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார் காயத்ரி.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் முன்னாள் மனைவி பல கட்சிகள் இருக்க தன்னை காப்பாற்றும் இயக்கமாக பாஜகதான் தமிழகத்தில் இருக்கும் என்று நம்பிக்கை வைத்து இருப்பதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை புரி