24 special

அதிமுக இடத்தில் இனி நாங்கள் தான்.....ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி!

ttv dinakaran
ttv dinakaran

சென்னனயில் பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 


நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக தேசிய கூட்டணியான பாஜகவின் இருந்து விலகியதாக அறைவித்தது. இதனை தொடர்ந்து பாஜக கூட்டணியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும்  அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூட்டணியில் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம்  டிடிவி தினகரன் கூறுகையில், நாடாளுமன்றத தேர்தல் குறித்து உரிய நேரம் வரும்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதுகுறித்து அறிவிப்பை வெளியிடுவோம். கோவை மாவட்டத்தில் வருகின்ற 21ம் தேதி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூடத்தில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து கண்டிப்பாக தெரிவிப்போம் என்று கூறினார்.ஆனால், எங்களது கூட்டணி செயல்பாடுகள் அனைத்தும் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். இரண்டரை ஆண்டு ஆகிவிட்டது திமுக அரசு ஆட்சிக்கு வந்து. ஆனால், சென்னையில் மழை பெய்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாமல் பாதுகாக்க முடியவில்லை. 

தற்போது, திமுக ஆட்சியில் அனைவரும் ஊழல் செய்து சிக்கி வருகின்றனர் என்று கூறியது ( செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், பொன்முடி, ஆ.ராசா) ஆகியோரை சுட்டி காட்டினார். விடியலை கொண்டு வருவோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இதுவரை மக்களுக்கு எந்த திட்டத்தையும் முறையாக செய்யவில்லை. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போராட்டம், ஆர்ப்பாட்டம் (ஆசிரியர்கள், விவசாயிகள்)  என அனைவரும் வாழ்வுரிமைக்காக போராடி வருவதே விடியல் அரசின் ஷைத்தானை என்று குற்றம் சட்டி கூறினார். 

இதற்கிடையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள், நீதிமன்ற நடவடிக்கைகளில் குறை சொல்ல முடியாது இதன் காரணமாகவே நீதிமன்றம் ஜாமினை மறுத்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதால் தான் இவ்வளவு நெருக்கடி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியல் வரலாம், அதற்காக அவர்களின் படத்திற்கு நெருக்கடி கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகாது. அரசியலை பொறுத்தவரை யாரு வேண்டுமென்றாலும் வரலாம் அவர்களை ஏற்று கொள்வது  ஜனநாயக நாட்டில் மக்கள் கையில் தான் உள்ளது என தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் இந்த பேச்சு, அமமுக வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற யூகங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதேபோல், டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று அறிவித்துள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் அணியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.