24 special

இதுதான் டெல்லி "குசும்பு" என்பதா? முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் என்ன நடக்குது பாருங்க?

stallin and Kejriwal
stallin and Kejriwal

தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை  திறந்து வைக்க டெல்லி. சென்றுள்ளார், டெல்லியில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் என பலரையும் சந்தித்த ஸ்டாலின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலயும் சந்தித்தார், அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லியின் மாதிரி பள்ளியை சுத்தி காட்டினார் கெஜ்ரிவால்.


அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏசி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கி கூறினார். பள்ளியின் கீழ் தளத்தில் உள்ள அறையில் மாதிரி பள்ளி தொடர்பான வீடியோ திரையிடப்பப்பட்டது.

மேலும், பள்ளியின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.மகிழ்ச்சி வகுப்பு (Happy Class):டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மகிழ்ச்சி வகுப்புகள் அதாவது புத்தகமில்லா வகுப்புகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்த நாளில் மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் பள்ளி மாணவ, மாணவர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார், அப்போது தமிழகமுதல்வர் ஸ்டாலினுக்கு தேச பக்தி என்றால் என்ன நாட்டு பற்று பற்றி குழந்தைகள் தெரிவித்தனர்.

அதாவது டெல்லி அரசு நடத்தும் மாதிரி பள்ளியில் இந்தி மொழி கற்பிக்க படுகிறது, நாட்டு பற்று கற்பிக்க படுகிறது கூடவே யோகாசனம் கற்பிக்க படுகிறது இவை மூன்றுமே தங்கள் எதிர் சித்தாந்தம் என கூறும் திராவிட கழகம் வழி வந்த திராவிட மாடல் அரசாங்கத்திற்கு கசப்பான விஷயம், தேசிய. கொடியை கூட ஆட்சியில் இல்லாத நேரத்தில் எற்றாத திமுக தலைவருக்கு.

டெல்லியில் தேச பக்தி என்றால் என்ன என மாணவிகள் கூறியது, உண்மையில் இது எதார்த்தமாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடந்ததா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர், கோவை குசும்பு போல இது டெல்லி குசும்பு என்றும் நெட்டிசன்கள் சிலர் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.