தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் அரசியல் அரங்கில் மட்டுமல்ல, ஊடகத்தை சேர்ந்த நெறியாளர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. தனியார் ஊடகத்தில் நெறியாளர் பணியில் இருக்கின்ற செந்தில் என்ற செந்தில்வேல் என்பவர் ஊடகத்தில் ஆதாரம் இல்லாமல் அடித்துவிட்ட தகவல் தற்போது அவருக்கு மட்டுமல்ல அவரை வேலைக்கு அமர்த்திய ஊடகத்திற்கு எதிராகவும் அமைந்துள்ளது.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :- 30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில், நெறியாளர் செந்தில்வேல் என்பவர், நான் தமிழக முதல்வராக இருந்தபோது தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன்,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது , எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும்,
கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக, அபாண்டமாக வீண் பழி சுமத்தினார் எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,
தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி, இந்த சூழலில் தனியார் ஊடக நிர்வாகம் செந்திலை அழைத்து விளக்கம் கேட்டுள்ளதாம் எதன் அடிப்படையில் அவ்வாறு பேசினீர்கள் ஆதாரம் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் செந்தில் தவளை முழிப்பது போன்று முழித்து அதாவது அந்த யூடுப் சேனலில் பேசினார்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது, மேலும் செந்தில் பேசிய எந்த தகவலுக்கும் ஆதாரம் இல்லையாம் இதனால் செந்திலை பணிக்கு அமர்த்திய ஊடக நிர்வாகம் கடும் அதிர்ச்சி அடைத்துள்ளதாம். விரைவில் ஆதாரம் இல்லாத தகவலை பரப்பிய செந்தில் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியில் இருந்து நீக்கினாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் நெட்டிசன்ஸ்.