24 special

நேரலையில் சவால் விட்டு மாட்டிக்கொண்ட திமுக நிர்வாகி..!

SG SURYA, KOVAI SELVARAJ
SG SURYA, KOVAI SELVARAJ

2024 லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தை முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்னும் அதற்கு எட்டு நாட்களே உள்ளது! .. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தையும் தமிழக அரசியல் கட்சிகள் பம்பரமாக வட்டமடித்து மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தின் எந்த மூளைக்கு சென்றாலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறி திரும்பி அனுப்பப்படும் ஒரு சூழ்நிலையை திமுக சந்தித்து வருகிறது. ஏனென்றால் கடந்த 2021 திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது ஆனால் தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதி ஒன்றையும் சரிவர நிறைவேற்றாததால் மக்கள் அனைவருமே அதிர்ச்சியில் கொந்தளித்து இருந்தனர், அதனால் தேர்தல் வரட்டும் அப்பொழுது இருக்கு இவங்களுக்கு என்ற வகையில் கொந்தளித்து மனதில் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் அனைத்தையும் தற்போது திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் ஊருக்குள்ளே கால் வைக்க முடியாத வகையிலான எதிர்ப்புகளை அந்தந்த பகுதி மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். 


                                                                                                             

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், பெரம்பலூரில் அருண் நேரு மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் டி ஆர் பாலு, கரூரில் ஜோதிமணி, என தொடர்ச்சியாக திமுகவின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறி திரும்பி சென்ற வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து நேற்று வேலூரில் திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்திற்கு ஆதரவாக துரைமுருகனே ஓட்டு கேட்டு சென்ற பொழுது ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் தடுத்து நிறுத்தியதோடு ஐந்து வருடங்களாக ஒன்றுமே செய்யவில்லை ரோடு போட்டு தர கேட்டோம் அதையும் நீங்கள் செய்யவில்லை இப்போ எங்க ஓட்டு கேக்குறதுக்கு மட்டும் வருவீங்களா? என்ற கேள்விகளை முன்வைத்து திமுகவினரை ஊருக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர்.

                                                                                                         


இப்படி செல்லும் இடமெல்லாம் கண்ணி வெடியா என்று திமுகவினர் வேதனைப்படும் அளவிற்கு மக்களின் எதிர்ப்பு திமுகவிற்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெடித்து வருகிறது. இந்த நிலையில் திமுக நிர்வாகி ஒருவர் தனியார் செய்தி தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஒரு சவாலை விட்டு மாட்டிக்கொண்டு உள்ளார். அதாவது காங்கிரஸ், அதிமுக பிறகு ஓபிஎஸ் அணி என கட்சி தாவிக் கொண்டிருந்த கோவை செல்வராஜ் கடந்த 2022 திமுகவில் இணைந்தால் மேலும் இவருக்கு செய்தி தொடர்பு துணைச் செயலாளர்  பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை செல்வராஜ் திமுக தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும், பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது அப்படி ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றாலும் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று இவர் கூறிய உடனே அந்த நிகழ்ச்சியில் இருந்த மற்ற அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். 

                                                                                                    

மேலும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நிறைய பேர் இது மாதிரி சவால் விட்டு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. என்று காமெடியாக கூற, பாஜகவின் மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யாவும் அந்த நிகழ்ச்சி இருந்ததால் ஜூன் நான்காம் தேதி அண்ணாமலை அவர்களின் பிறந்த நாளும் கூட அன்று வாக்கு எண்ணிக்கை அதனால் கோவை செல்வராஜ் அவர்கள் அன்றைய தினம் அரசியலை விட்டு விலகப் போகிறார் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது என திமுக செல்வராஜை பங்கமாக கலாய்த்துள்ளார். மேலும், கோவை செல்வராஜ் அவர்களுக்கு நடக்கக்கூடிய எந்த லாப நஷ்டத்திற்கும் கம்பெனி பொறுப்பு கிடையாது என அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கூற ஒட்டுமொத்தமாக அந்த நேரலை காட்சி சிரிப்பலையில் கலகலப்பாக இருந்தது! இதன் மூலம் பாஜகவின் வெற்றி என்பது தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை பெற்று வரும் திமுக சார்பில் கோவை செல்வராஜ் இப்படி ஒரு சவாலையும் விட்டிருப்பது அறிவாலயத்தையும் சற்று கடுப்படைய வைத்துள்ளது.