அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. சிவனுக்காக அமைக்கப்பட்ட ஐம்பூதங்களின் தலங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் அமைந்து இருக்கின்றது. இந்த ஆயுத தளங்களில் ஆகாயத்திற்காக உருவாக்கப்பட்ட தலைவன் தான் இந்த சிதம்பரத்தில் உள்ள நடராஜர் திருக்கோவிலாகும். ஆயுர்வேதங்களுக்காக கட்டப்பட்ட கோவில்கள் அனைத்தும் சிவனுக்கு உரியது என்பதை நமக்கு தெரிந்த ஒன்றே!! ஐம்பதங்களில் நீருக்காக கட்டப்பட்டது திருவானைக்காவல்!! நெருப்புக்காக திருவண்ணாமலை!! காற்றுக்காக காலகஸ்தி!! நிலத்திற்காக காஞ்சிபுரம்!! கடைசியாக ஆகாயத்திற்காக சிதம்பரம் என பஞ்சபூதங்களுக்காகவே தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்த சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜன் திருக்கோவிலானது பல ஆச்சரியங்கள் நிறைந்த கோவிலாக அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எப்போது சென்று பார்த்தாலும் அது மிகவும் புதுமையான கோவில் போலவே காட்சியளிக்கின்றது. ஆனால் இந்த கோவில் எப்போது கட்டப்பட்டது என்று இன்று வரையிலும் அறிய முடியாத ஒரு புதிராகவே உள்ளது. இத்தகைய பழமை வாய்ந்த கோவில்தான் இந்த சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் திருக்கோவிலாகும். இந்தக் கோவிலின் கட்டிடக்கலை ஆனது பல மர்மங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் இக்கோவிலின் அமைப்பானது முழுமையாக மனித உடம்பின் அமைப்பை தொடர்பு படுத்தி தான் இந்த கோவிலை அமைப்பை உருவாக்கியுள்ளனர். மொத்தம் இந்தக் கோவிலுக்கு 9 நுழைவாயில்கள் உள்ளது. இந்த சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜரை தரிசனம் செய்பவர்களுக்கு முத்தி கிட்டும் என்று அனைவரும் கூறுகின்றனர்.
எல்லா கோவில்களும் ஏதாவது ஒரு அரசன் கட்டியிருப்பார் என்று நாம் வரலாற்றில் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இந்த சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோவிலானது பல அரசர்களால் கட்டப்பட்டது ஆகும். மேலும் இந்தக் கோவிலில் நடராஜரை அருகில் சென்று பார்க்க நினைக்கும் ஆண் பக்தர்கள் தங்களின் மேல் சட்டை இல்லாமல் தான் சென்று பார்க்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது. இது கேரளாவில் உள்ள சில கோவில்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். இந்த கோவிலில் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் நடராஜரே பிரதான மூர்த்தியாக அமைந்திருக்கிறார். தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது முதல் தேவாரத்தலம் ஆகும். அங்குள்ள ஈசனை வழிபடுபவர்களுக்கு மன நிம்மதியும், அவர்களின் உடலில் ஏதாவது ஒரு நோய் இருந்தாலும் கூட இங்கு வந்து தரிசனம் செய்வதால் அந்த நோய் அவர்களை விட்டு நீங்கும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் ஏதாவது ஒரு கலையின் மீது ஆர்வம் வைத்து அதில் சாதித்து காட்ட வேண்டும் என்ற நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதால் நிச்சயமாக அவர்கள் அந்தத் கலையில் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.மேலும் பணக்கஷ்டம் இருப்பவர்கள் இந்த கோவிலில் அமைந்திருக்கும் கால பைரவரை வந்து வழிபட்டு சென்றால் அவர்களின் பண கஷ்டம் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்று பலர் கூறுகின்றனர். மேலும் குழந்தை வரம் இல்லாதவர்கள் கூட இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதால் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது என்று அங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு பல வேண்டுதல்களை வேண்டி அதை அனைத்தும் நிறைவேறியவுடன் அந்த பக்தர்கள் அனைவரும் மீண்டும் வந்து இந்த கோவிலுக்கு பலவாறு நேற்று கடன்களையும் செலுத்தி வருகின்றனர்!! இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் சென்று வாருங்கள்!!