
தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கருத்து மோதல்கள் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை முன்வைத்து அதிகரித்து வருகின்றன, இந்த சூழலில் சிவன் கோவிலில் சென்று கந்தசஷ்டி கவசம் பாடலை பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் சிவன் கோவிலில் முருகருக்கு சன்னதி இருப்பது கூட தெரியாதா செந்தில்பாலாஜிக்கு என பலரும் உன்மையை கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர், ஒரு சிலரோ கோவிலின் வரலாறையே எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
அப்படிதான் செந்தில்பாலாஜி பேசிய வீடியோ மற்றும் கோட்டை ஈஸ்வரன் கோவில் வரலாறை நேரடியாக ஒப்பிட்டு பதிலடி செய்து வருகின்றனர், இதில் காமெடி என்னவென்றால் செந்தில் பாலாஜியை ட்ரோல் செய்யும் விதமாக இறுதியில் தலையில் இரட்டை இலையில் விளக்கு எரியும் வீடியோவையும் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.