தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கருத்து மோதல்கள் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை முன்வைத்து அதிகரித்து வருகின்றன, இந்த சூழலில் சிவன் கோவிலில் சென்று கந்தசஷ்டி கவசம் பாடலை பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் சிவன் கோவிலில் முருகருக்கு சன்னதி இருப்பது கூட தெரியாதா செந்தில்பாலாஜிக்கு என பலரும் உன்மையை கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர் இந்த சூழலில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதில்,
சாராய அமைச்சர் ஒரு கோமாளி! “ஊழல் பேர்வழி, ஆள்கடத்தல் பேர்வழி, நில அபகரிப்பு மோசடி நபர், கேடு கெட்டவன், என்றெல்லாம் கழுவி கழுவி ஊற்றி விமர்சித்த நபரையே வெட்கம், மானம்,சூடு, சொரணை என்ற எதுவேமேயில்லாமல் பதவிக்காக, பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்து தலைவராக ஏற்று கொண்ட உன்மத்தன் கோமாளியா?
அல்லது ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் சந்நிதியின் முன்பு நாட்டு மக்களின் நன்மைக்காக, அமைதிக்காக கந்த சஷ்டி கவசம் படித்த உத்தமன் கோமாளியா? “ என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.