அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற பழமொழி நியாபகம் இருக்கிறதா? அதனை நிரூபிக்கும் விதத்திலான செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஆம், திமுக அரசு தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி வருவது குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. ஆளுங்கட்சியே இப்படி செய்தால், அதனை பின்தொடருபவர்கள் சும்மா இருப்பார்களா என்ன?. தப்பை தட்டிக்கேட்டால் அடி, உதை தான் என்ற விஷயத்தில் இறங்கியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கூறி முகநூலில் பதிவிட்ட பாஜக முன்னாள் மாநில செயலாளர் துரை தனசேகர் மீது குறிப்பிட்ட கும்பல் ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக அகமது பாஷா, மன்சூர் அலிம், சையது அப்துல் ரகுமான், இப்ராஹிம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கை, தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தனசேகரனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தாக்குதலைக் கண்டித்து முழு கடையடைப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.