24 special

குஷ்புவுக்கு கோபம் வந்தால் எப்படி திட்டி இருக்காங்க பாருங்க..!

Kushpoo
Kushpoo

துக்கத்தில் இருப்பவர்களை கூட கேவலமாக கேலி செய்து சித்தரித்த திமுக நிர்வாகியால் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையே வெடித்துள்ளது. 


பிற கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளை கேலியாகவும், ஆபாசமாகவும் ட்ரோல் செய்வதில் திமுகவினர் முன்னணியில் இருப்பதாக நெட்டிசன்களும், பாதிக்கப்படும் பெண்களும் சோசியல் மீடியாவில் குற்றச்சாட்டுவது உண்டு. அப்படி திமுகவின் ட்ரோல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை குஷ்பு. பாஜகவில் இணைந்த பிறகு என்றில்லை, திமுகவில் இருக்கும் போதும் சரி, காங்கிரஸில் இணைந்த போதும் சரி குஷ்புவை உ.பி.க்கள் சோசியல் மீடியாவில் வம்பிழுத்து வந்தனர். 

குஷ்புவை மட்டுமல்லாது பாஜகவில் இருக்கும் கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகளையும் திமுக மேடையில்  அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கடுமையாக விமர்சித்து இருந்தார் திமுக பேச்சாளர் சைதை சாதிக்.    இந்த விவகாரத்தில் அவர் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனால் தற்போது துளிகூட அரசியல் நாகரீகம் இல்லாமல், மனிதாபிமானம் இன்றி செய்துள்ள காரியம் சோசியல் மீடியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஷ்புவின் சகோதரர் அபுபக்கர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்த குஷ்பு, “என் மூத்த சகோதரர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்காக நீங்கள் எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்”. இதற்கு நிறைய பேர் குஷ்புவிற்கு நம்பிக்கையும், ஆறுதலும் சொல்லி வந்தனர். 

இந்நிலையில் நேற்று குஷ்புவின் சகோதரர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். “உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. நிம்மதியாக இருங்கள்” என பதிவிட்டிருந்தார். 

இந்த ட்விட்டர் பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் குஷ்புவின் இழப்பிற்கு ஆறுதல் கூறினர். அவரை மனம் தளாராமல் உறுதியாக இருக்கும் படி இரங்கல் தெரிவித்து வந்தனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நோயால் பறிகொடுத்துவிட்டு, துக்கத்தில் இருக்கும் குஷ்புவிடம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி பிரவீன் சிட்டி, ''அக்காவுக்கு சின்னத்தம்பி நினைப்பு வந்துடுச்சு'' என்று கமெண்ட் அடித்துள்ளார்.  

இதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பு, ''என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்த நேர்ல வா. இதுதான் உங்க கீழ்த்தனமான புத்தி. மாறவே மாட்டீ ங்களாடா? நீ எல்லாம் கலைஞரை பாலோ செய்யறேன்னு  சொல்லிக்க வெட்கப் படணும். இவர் திமுக  கட்சி உறுப்பினர். இவர்களால் இதைவிடத்தரம் தாழ்ந்து போய்விட முடியுமா?'' என கோவத்தில் கொந்தளித்துள்ளார். திமுக நிர்வாகியின் அநியாயமான ட்வீட்டை பார்த்த பலரும், “ஒருவர் வீட்டில் ஒரு துக்க விஷயம் நடந்தால் நாம் ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்ல அவமதிக்க கூடாது.” என்றும், “திமுக நிர்வாகிகளுக்கு எப்போது எதை பேசுவது என்று தெரியாதா?” எனத் தெரிவித்து வருகின்றனர். குஷ்பு வெளுத்து வாங்கியதில் அந்த திமுக நிர்வாகி ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு தெறிந்து ஓடிவிட்டார்.