
கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் விசிகவினர் மாறி மாறி முழக்கங்களை எழுப்பி மோதி கொண்டதால் கைகலப்பு உண்டாகும் சூழல் உண்டானது .
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோவை விமான நிலையம் வந்தார். அதேபோல கோவை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கோவைக்கு வருகை தந்துள்ளார்.
இருவரையும் வரவேற்க இரண்டு கட்சி நிர்வாகிகளும் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.அப்போது விசிக நிர்வாகிகள் வேரறுப்போம் வேரறுப்போம் என கோஷம் போட்டனர் இதனால் ஆவேசமடைந்த பாஜகவினர் விசிகவினரை நோக்கி குவிய விசிகவினர் விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
பாஜகவினர் நுழைவு வாயிலில் நின்று தமிழிசையை வரவேற்க குவிந்தனர் ஒரு கட்டத்தில் சிறுத்தைகள் ஆக்ரோஷம் அடைந்த நிலையில் பாஜகவினர் வெளியே வர பாதுகாப்பாக திருமாவளவனை காரில் ஏற்றி அனுப்பியது காவல்துறை. இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளாமல் இருக்க காவல்துறை பாதுகாப்பாக நின்றது.
இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, விமான நிலையத்தில் கூட பாஜகவினர் நுழைவு வாயிலில் நிற்கின்றனர் ஆனால் விசிகவினரை வெளியில் நிறுத்துகின்றனர் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். கோவையில் விசிகவிற்கு அமைப்பு ரீதியாகவும், வாக்கு வங்கி ரீதியாகவும் ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.