Tamilnadu

நீங்கள் "முதல்வர் என்றால் நான் உங்களுக்கும் பிரதமர்" என்பதை நிரூபித்த மோடி ,செய்த தரமான சம்பவம்

pm modi and cm stalin
pm modi and cm stalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரை அருகில் வைத்து கொண்டு மத்திய அரசை குற்றம் சுமத்திய நிலையில் இறுதியில் பிரதமர் பதிலடி கொடுத்த சம்பவம்தான் பேசுபொருளாக மாறியுள்ளது.


பிரதமரின் தற்போதைய சென்னை வருகை வழகத்திற்கு மாறாக பெரிதும் எதிர்பார்க்கபட்ட ஒன்றாக மாறியது, இதற்கு காரணம் எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தது மிக பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சாலைகளை வழிமறித்தனர்.

ஆனால் இந்த முறை ஆளும் கட்சியாக திமுக இருப்பதனால் எது போன்ற நிலையை திமுக எடுக்க போகிறது என்ற  எதிர்பார்ப்பு எழுந்தது, இது ஒரு புறம் என்றால் முள்ளிவாய்க்காள் நினைவு நிகழ்ச்சியை நடத்த திருமுருகன் காந்தி தரப்பிற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது அவர்கள் தரப்பிடையே பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது.

வெளிப்படையாக திருமுருகன் காந்தி தரப்பு திமுக முதுகில் குத்தி விட்டதாக குறிப்பிட்டனர், மேலும் தருமை ஆதினம் விவகாரத்தில் திமுக அரசு,  திராவிட கழகத்தின் புகாரை தூக்கி வீசி, தருமை ஆதினத்தின் பட்டினம் பிரவேஷத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது இதனால் பெரியாரிஸ்ட் கூட்டமும் ஸ்டாலின் மீது வருத்தத்தில் இருந்தனர், அத்துடன் தனியார் பத்திரிகையான விகடன் மீது பதியபட்ட வழக்கால் இடதுசாரிய பத்திரிகை துறையினரும் ஸ்டாலின் மீது ஆதங்கத்தில் இருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதற்காக, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற ராஜிவ் கொலையாளி பேரறிவாளன் விவகாரத்தை ஸ்டாலின் கையில் எடுத்து இருக்கிறார் என டெல்லிக்கு இங்கிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் புகார் தெரிவிக்க காங்கிரஸ் தரப்பும் கடும் அதிர்ச்சியில் இருந்து இருக்கிறது.

இந்த சூழலில் தான் பிரதமர் மோடியை மேடையில் வைத்து கொண்டு மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும் விமர்சனம் வைத்தால், அதிருப்தியில் இருக்கும் பாஜகவிற்கு எதிரான தரப்பை வளைத்து விடலாம் என்ற கணக்கில் ஸ்டாலின் மேடையில் விமர்சனம் செய்து இருந்தாராம்.

இத்தனைக்கும் அப்படியே எழுதி கொடுத்ததை ஆங்கிலத்திலும் தமிழிலும் முதல்வர் ஒப்பித்ததாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர், இந்த நிலையில் தான் பிரதமர் மோடி ஸ்டாலின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது உரையில் தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியல் போட்டார்.

ஆனால் யாரும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்க்காத விதமாக இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசியது தமிழகத்தில் உள்ள பல தரப்பை கடும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது, பிரதமர் மோடி தனது உரையின் இறுதியாக இலங்கைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர் உள்ளிட்ட அனைவருக்கும் உதவிகள் செய்யப்படும். அண்டைநாடு என்பதுடன் நட்பு நாடு என்கிற வகையில் உணவு, மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும்.

இலங்கை தமிழர்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு சென்று திட்டங்களை தொடங்கிவைத்த இந்திய பிரதமர் நான் தான் நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை வளமானதாக ஆக்குவோம் என்று பேசிய பிரதமர், வணக்கம்! மிக்க நன்றி! பாரத் மாதா கி கே, வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார்.

எந்த இலங்கை தமிழர் விவகாரத்தை கொண்டு மத்திய அரசிற்கு மாநில அரசான திமுக அழுத்தம் கொடுத்ததோ அந்த இலங்கை தமிழர்களுக்கு உதவிய பிரதமர் நான் தான் என முதல்வர் ஸ்டாலினை அருகில் வைத்து கொண்டு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

இது மட்டுமின்றி கச்சதீவை மீட்ட உடன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தர இருப்பதாகவும் அன்றைய தினம் பாஜக சார்பில் பிரமாண்ட பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது அரசின் செயல்பாடுகளை பிரதமர் மோடி பட்டியல் போட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் பிரதமர் மோடியின் அடுத்த தமிழக வருகை திமுகவிற்கு பெருத்த அடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.